|
6 |
| ஆங்கிலத் தோடேயே ஆரியம் நீங்கிடின் | | ஓங்கிய தமிழனுக் குண்மையாம் விடுதலை. |
|
7 |
| ஆங்கிலத் தின்பினே ஓங்கின தாரியம் | | ஈங்கே தமிழ்கெட இந்தியும் வந்ததே. |
|
8 |
| மாணுறு தமிழகம் காணுமிந் நிலையினில் | | சாண்முனே யேறியும் சறுக்கின தொருமுழம். |
|
9 |
| தமிழனுக் குரிமையே தமிழ்கெடின் இல்லையே | | இமிழ்கடல் சூழ்நிலம் இருப்பது தொல்லையே. |
|
10 |
| உரிமையொன் றின்றியே உளதுபோற் காப்பதும் | | அவலை நினைத்துவெற் றுரலையி டிப்பதே. |
|
|
149. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை |
|
'வந்தே மாதரமே' என்ற மெட்டு |
ப. |
| தமிழன் விடுதலை தமிழின் விடுதலையே. |
|
து. ப. |
| இ(ம்)மியும் உரிமையில்லை இ(ன்)னுந்தமிழக எல்லை (தமிழன்) |
|
அ. |
| இந்தியாவில் விடுதலை இந்திநாடே பெற்றது | | ஏனைய திராவிடங்கள் ஏதோ சிறிதுற்றன | | இருட்கண்ட நாடுகளும் இன்று - மிக | | ஏற்றமான விடுதலை கண்டு | | எக்களிக்கும் நேரம் இந்தியத் தென்னோரம் | | தத்தளிக்க நேரும் தமிழர் எல்லாரும் (தமிழன்) |
|