|
| இந்திய வொருமைப்பா டென்றூக்கி - வர | | எந்தமி ழயிரையும் இனிநீக்கி. (இந்திய) |
|
2 |
| சமற்கிருதக் குழு அமைத்திட்டார் - பின்பு | | சாப்பிள்ளை மணியணை தனிலிட்டார் | | திமித்திமி யெனப்பணம் செலவிட்டார் - எந்தம் | | தீந்தமிழ்தனை நடுத்தெரு விட்டார். (இந்திய) |
|
3 |
| விடுதலை விழவினில் மொழி மூன்று - பெரு | | வேத்தியற் சிறப்புறும் பல்லாண்டு | | அடிதலை தடுமாறும் அயல்ஈண்டு - மிக | | அகத்தவர் பசிக்கவே விருந்தான்று. (இந்திய) |
|
148. தமிழனுக் குரிமையின்மை |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
1 |
| ஆங்கில ஆட்சியே நீங்கிய விடுதலை | | ஊன்றிய வேனிலில் தோன்றிய கானலே. |
|
2 |
| ஈரடி மைத்தனம் இன்றமிழ் நாட்டிலே | | ஆரியம் ஆங்கிலம் ஆம்பெயர் சாற்றினே. |
|
3 |
| ஆங்கிலத் தினுமிக ஆரியம் கொடியது | | பாங்கவை எறும்பையும் பாம்பையும் நிகருமே. |
|
4 |
| உடலையே பிணித்திடும் ஓங்கிய ஆங்கிலம் | | உளத்தையும் பிணிப்பதே ஊன்றிய ஆரியம். |
|
5 |
| ஆரியத் தால்விலங் கானவன் தமிழனே | | ஆங்கிலத் தாற்பினும் ஆயினன் மாந்தனே. |
|