|
146. போலிக் குடியரசு |
|
'பாலாபிடேகப் பழனி மலையப்பன்' என்ற மெட்டு |
ப. |
| ஆங்கில ஆட்சியே நீங்கினதும் இன்பம் | | அடையவில்லை நாமென்றறிந்தே அந்நாள் | | காங்கிர சென்னும்பேர் ஓங்கு பேராயத்தைக் | | கலைத்துவிடக் காந்தியடிகள் சொன்னார். |
|
(உரைப்பாட்டு) |
| ஏராளமான பணி இந்திய வறுமையைப் போக்குதற் கிருக்கவே | | வேறான செய்திகளில் வீணாகப் பெருந்தொகை வீசியே இறைக்கின்றார் |
|
ப. எடுப்பு |
| இந்திய விடுதலை யென்பதெல்லாம் வட | | இந்தியைப் பொதுமொழி யாக்குவதே | | இந்திய வொருமைப்பா டென்பதெல்லாம் மெல்ல | | எந்தமிழை யிங்கே நீக்குவதே |
|
(உரைப்பாட்டு) |
| அறியாமையோடு குலப்பிரிவினை யென்னும் பேய் அலைத்துவரும் மக்களைப் | | பெருவாரியாய்க் கொண்டு பெயருக்குக் குடியரசு பேணிவருதல் வெட்கமே. (ஆங்.) |
|
147. ஆரியத்தை வளர்த்துத் தமிழைத் தளர்த்தல் |
|
பண் - (வசந்தா) தாளம் - முன்னை |
ப. |
| இந்திய விடுதலை இதுதானோ | | முந்தி யாரியம் வளர்ப்பதும் ஏனோ |
|
உ.1 |
| இந்தியைப் பொதுமொழி யென்றாக்கிப் - பின்னே | | எழிற்கலை யாங்கிலந்தனைத் தாக்கி |
|