|
2 |
| பிறப்போடு தொடர்புள்ள பேய்க்குலப் பிரிவினை | | சிறப்பாக வுள்ளஇந்தச் சிறுமைமிகும் இந்திய தேயம் | | சீருமுரிமை மாயும் | | சேரும் அடிமை நோயும் | | செவ்வனே ஆயும். (குடி) |
|
3 |
| குலவகுப் பில்லாததோர் குமுகாயம் வகுப்பதெம் | | கொள்கையென்ற பேராயம் குலவழியிலே இன்றுசெல்லும் | | குறித்த தேர்தல் வெல்லும் | | கொடுவலிமை புல்லும் | | குணமோ சொல்லும். (குடி) |
|
154. இந்தியக் குடியரசு |
|
'நீலாற்றின் தீரத்திலே' என்ற மெட்டு |
ப. |
| இந்தியாவிற் குடியரசும் எந்தமுறை நடப்பதென்றே | | ஏனைய நாட்டுள்ளவர்க்கே எள்ளளவுத் தெரியாது. |
|
து. ப. |
| சொந்தமொழி நூற்றிற்குத் தொண்ணூறு கல்லாமை | | சொல்லளவாங் குலப்பிரிவு கொள்ளுங்குடியர சேது. (இந்தி) |
|
2 |
| தாய்மொழியிற் கையெழுத்தும் தாமாக இடத்தெரியாத் | | தற்குறியும் சட்டவவை பாராளு மன்றனையும் | | ஆய்பொருளும் அங்கியலும் அனைத்துமறி யாதுதலை | | ஆட்டிக்கொண்டே கருத்தெடுக்கும் அன்று | | தூக்குங் கையிணையும். (இந்தி) |
|
உ.1 |
| வேட்பாளர் தகுதியையும் விரும்பியுற்ற கட்சியையும் | | விழித்தறியார் குடவோலையர் வெள்ளைகுலம் வென்றாடும் | | காட்டும் தேர்தல் சாவடியில் காண்பர் தேசப்படம் தம்பேரைக் | | கண்டதிற் குத்மேசையிட் டுக்கையிலும் பின் கொண்டோடுவர். (இந்தி) |
|