|
187. இந்தி வடமொழியால் தேயவொற்றுமைக் கிடமின்மை |
|
1 |
| பேசுமொழி யொன்றெனவே ஆகி விடினே - உடனே | | பேசுமிடம் ஒற்றுமையாய்ப் போய்விடு மென்பார் | | நேசமாகப் பன்மொழியார் பாரில் இல்லையோ - போரும் | | நேரிடத்தொரே மொழியார் மாய்வதில்லை யோ. |
|
2 |
| கேழ்வரகில் நெய்யொழுகும் என்று கிளந்தால் - அதைக் | | கேட்பவர்க்குக் கொஞ்சமேனும் மதியில்லையா | | வாழ்வரசில் ஒற்றுமைக்கு வடமொழியோ - எரி | | வன்னெருப்பை அணைத்தற்கு எண்ணெய் வழியோ |
|
3 |
| ஆரியத்தால் வந்ததமிழ்க் கேடுகளையே - இன்று | | அளவிட்டுச் சொல்ல எவராலே முடியும் | | சேரிடத்தைத் தானறிந்து செம்மையுறாமல் - நாம் | | சிறுமையுற்றோம் இதென்று தீரவிடியும். |
|
4 |
| ஒற்றுமையே உரமென்ப துண்மையா னாலும் - எங்கும் | | ஒரேயளவாக எல்லாம் ஒன்றுபடுமோ | | பெற்றவயி றொன்றில்உடன் பிறந்தவரும் - வேறு | | பிரிகின்றாரே மணத்தின் பின்னர் இடமே. |
|
5 |
| தாயும் பிள்ளையுமானாலும் தன்னலத்திலே - அவர் | | வாயும் வயிறும் வேறென்று தாம்அறையுமே | | தேயமதிலுள்ள பற்றுத் தேயுமென்றாலும் - என்றும் | | தாய்மொழியிலுள்ள பற்றுத்தான் குறையுமோ |
|
6 |
| வலியச் சண்டையிடுதல் வகை கெட்டது - மேலும் | | வந்த சண்டை விடுவதும் வகை கெட்டது | | நலியத்தான் வரும் இந்தி நாகரியையே - இந்த | | நாட்டை விட்டுத் துரத்துதல் நன்மையுற்றதே. |
|