பக்கம் எண் :

160இசைத்தமிழ்க் கலம்பகம்

விரும்பாத நிலையினில் வேற்றுமொழி யாளர்மேல்
    விரகுநெறிகள் பல விரிவாகக் கையாண்டு
இரும்பான மனத்துடன் எத்துணை யெதிர்ப்பையும்
    எதும்பொருட் படுத்தாமே இறுகும்வகை யீண்டு
(பெரும்)
190. தமிழமாணவர்க்கு மும்மொழிக் கல்வி தகாமை
பண் - (நாதநாமக்கிரியை)
தாளம் - உருவகம்
'பித்தா பிறைசூடீ' என்ற வண்ணத்திற் பாடுக.
1
பாரே யுயர் மேலையவர் பலவாயின் கட்டாயம்
சீராயொரே யினமாமொழி செம்மை யுறக்கற்பார்
நீரோடு நெய்யிதளே நிகராகத் தமிழ் நாட்டில்
சேராத மும்மொழி கற்கவே செய்தல் நலமாமோ?
2
குடும்பின் வழிதொடர்ந்தே குலத்தொழிலாய்ப் பயின்றாலும்
வடுவின்றியே கற்கப் பொது வலிமை இருமொழிக்கே
நெடுங்கால மாயுயர் கல்வியை நீத்த தமிழ் நாட்டில்
திடுமென்று மும்மொழி கற்கவே தெரித்தல் நலமாமோ?
3
பனிமா மழையல்லா நிலை பகல்போல நள்ளிரவும்
சுனையே குளித்தெழுந்தாலும் பின் சோரு முடல் புழுங்கக்
கனலாய் வருங்கதிரோன் சினங்கடுகுந் தமிழ்நாட்டில்
வினையாக மும்மொழி கற்கவே விளைத்தல் நலமாமோ?
4
குறிதாகிய வாழ்நாள் பினுங் குறுகிவரும் நாளில்
அறிவாகிய துறையே பல அறிதல் மிக அறிவாம்
சிறிதாயினும் இந்திமொழி செல்லாத் தமிழ் நாட்டில்
வறிதாக மும்மொழி கற்கவே வகுத்தல் நலமாமோ?