|
2 |
| தன்னாட்டினமும் தன்னியல் மொழியும் தாழ்வாம் இந்நாளும் | | மன்னாட்டினமும் மாய்ந்துள மொழியும் வாழ்வாம் எந்நாளும் | | இந்நாள் இதனின் விலகும் வழியும் என்னென்றே கேளும் | | இனிதாம் மறைமலை யடிகள் தமிழே என்றுங் கையாளும். |
|
224. மொழிவழி நாடு |
|
'பாலும் பழமும் கைகளி லேந்தி' என்ற மெட்டு |
ப. |
| முன்னும் உலகில் மொழிவழி நாடு | | மொழியும் இனமும் ஒருவழிப் பாடு | | சென்னை யெனுந்துறைத் தலைநக ரோடு | | சிறந்தே ஓங்கும் செந்தமிழ் நாடு. |
|
து. ப. |
| நகரின் பெயரால் நாட்டொரு கூறே | | நடையில் முரண்தமிழ் நாட்டின் பேரே | | பகரும் மொழியால் பகுத்துள வாறே | | பரவு தமிழ்நா டென்பது சீரே. (முன்னும்) |
|
224. தமிழுக்குக் கலைக்கல்லூரி யின்மை |
|
'பாலிருக்கும் பழமிருக்கும்' என்ற மெட்டு |
ப. |
| தமிழகத்திற் கலைக்கல்லூரி தமிழ்க்கிருக்காது | | தனித்தமிழ்க் கல்லூரியிலே கலையிருக்காது |
|
து. ப. |
| தமிழுக்கென்றே கலைக்கல்லூரி வகுப்பிருந்தாலும் | | கலைச்சொற்களிற் பலவும் நோக்கின் தமிழிருக்காது |
|