|
2 |
| திருவைக் காக்கத் திருடர் துணையோ | | தெவ்வரைத் தன்னொடு சேர்த்தல் வினையோ | | குரவர் சொல்லெலாம் கொள்படிப் பினையோ | | குறிப்பது செய்யக் கொடுவினை தனையோ. |
|
3 |
| வடமொழி யிந்தி மனங்கொள் தகையர் | | வண்டமிழ்க் கென்றும் வன்பெரும் பகையர் | | இடமுற இரண்டும் ஏற்றிடும் வகையர் | | எலியோடு பூனை ஏந்திய நகையர். |
|
4 |
| பகையாம் இருவர் பாங்கினும் ஒருவர் | | பண்பாய் நட்பென யாங்கனம் வருவர் | | வகையாய் வாழ வழியவர் தெரிவர் | | வாய்மையில் ஐயுற வேயிடந் தருவர். |
|
5 |
| தன்னலத் தாரைத் தழுவல் தீது | | தாயையுங் கொல்வர் தாம்தயங் காது | | மன்னலம் மானம் மதியவர்க் கேது | | மதிக்கும் பதவி வந்துறும் போது. |
|
223. தமிழொன்றே தருக்கத்திற்கிடமான பாடமாதல் |
|
பண் - காப்பி தாளம் - முன்னை |
1 |
| தமிழகக் கல்விப் பாடப்பொருள்கள் தவப்பல விருந்தாலும் | | தமிழொன்றேதான் அடிமுதல் முடியும் தருக்கத்திற்கிடமாம் | | இமிழ்கடலுலகில் இந்நிலைமைவே றெந்நாட்டிற் சாலும் | | இலகும் உண்மை மறையின் அடிமைக் கேதுவாம் மடமாம். |
|