|
2 |
| நெடுங்கணக்கு முதலாக | | நேரான வொலிகளுடன் | | கொடுந்தமிழுங் கலவாமல் செல்லமுத்து - பயில் | | குமரிநிலத் திருந்தபடி செல்லமுத்து. |
|
3 |
| உரைநடையில் மறைமலையார் | | உயர்கா.சு. வுடன்மகிழ்நன் | | வரைநூல்கள் வாங்கிப்படி செல்லமுத்து - அவை | | வழக்கில்வரப் பழக்கம்பண்ணு செல்லமுத்து. |
|
4 |
| செய்யுளிலே மேற்கணக்கும் | | சிலம்புதிருக் கோவையுடன் | | பொய்யாத குறளும்படி செல்லமுத்து - அறம் | | பொருந்தியநா லடியும்படி செல்லமுத்து. |
|
5 |
| இலக்கணத்திற் காரிகையும் | | இலங்கியதொல் காப்பியமும் | | விளக்கமாகப் பயின்றுதெளி செல்லமுத்து - மிக | | விலக்கிவட கூறுகளைச் செல்லமுத்து. |
|
|
222. தமிழ்ப் புலவரை இருவகையராய்ப் பிரித்தறிக! |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
1 |
| மறைமலை யடிகள் வழியர் வேறு | | வையா புரியார் வழியர் வேறு | | பிறைநிலைத் தமிழே பெரிதாமாறு | | பேணும் புலவரைப் பிரித்திவ் வாறு. |
|