|
2 |
| உண்மை நடுநிலை அன்பிவை மட்டும் | | உள்ளவை யேஉண்மை யானநற் சட்டம் | | வன்மை நடுநிலை யின்மைபொய் முற்றும் | | வந்தவை கொள்ளைக்கே வலைவீசும் திட்டம். |
|
3 |
| செந்தமிழ் வடவர்தாம் தெரிந்திலர் சற்றும் | | சென்றவ ருந்தமிழ் கண்டிலர் கற்றும் | | இந்தியோ டாங்கிலம் எண்சமம் உற்றும் | | இந்தியார் தலைமையால் இட்டதே சட்டம். |
|
4 |
| வழுவாத மாந்தரே மாநிலத் துண்டோ | | வழுவைத் திருத்தலே வாகான தொன்றே | | பழுதான சட்டத்தைப் பாதுகாப் பின்றே | | பழுதையை வெள்ளத்திற் பற்றுதல் அன்றோ. |
|
5 |
| பன்னாடு கொண்டது பாரும்இத் தேயம் | | படியாத மாபெரும் பான்மையர் தாயம் | | எந்நாளும் ஆளவே எண்ணும்பே ராயம் | | இறைவனென் றொருவனும் இருப்பதை ஆயும். |
|
228. தமிழர் மாகழகம் |
|
'செய செய பாரததேவீ கண் பாராய்' என்ற மெட்டு |
ப. |
| உண்மைத்தமிழர் இன்றே ஒன்றாகச் சேரும் | | ஓங்கும் தமிழ்க் கழக உறுப்பாயெல்லாரும். |
|
உ.1 |
| வண்மெய்த் தமிழ்அழிய வரும்இந்தி பாரும் | | வாளா இருப்பின்அது வாளாகித் தீரும். (உண்மை) |
|