|
237. தமிழ்நாட்டுத் தலைவர் தகுதி |
|
'வந்தனங்கள் தந்தோமே' என்ற மெட்டு |
ப. |
| தமிழ்நாட்டில் இனித் தலைமைபெற - முனம் | | தழுவுக மூன்றுநிலை யின்றே. |
|
து. ப. |
| தமிழராயினும் அயலராயினும் | | தமிழைப் போற்றுவார் தரமொன்றே (தமிழ்) |
|
உ.1 |
| கோயில் இறைவன் வழிபாடு - மிகக் | | குலவுந் தமிழில் நடைபெறுக | | கோதி லாமலே ஓதுவார்செயின் | | குலமே வரையறைத் தடையறுக (தமிழ்) |
|
2 |
| தமிழின் உண்மை வரலாறே - எதுந் | | தடையில் லாமல் வெளிவருக | | தலைகீழாகிய நிலைமை மாறியே | | தகவே குமரி வழியுறுக (தமிழ்) |
|
3 |
| இந்தி யெனும்புன் வடமொழியை - இனி | | இந்நாட் டறவே எடுத்திடுக | | இந்தியா வெங்கும் இயலும் ஆங்கிலம் | | என்றும் பொதுவென் றேற்படுக (தமிழ்) |
|
238. தமிழ்ப் பல்கலைக்கழகம் |
|
பண் - காப்பி தாளம் - முன்னை |
| பல்கலைக் கழகமே பைந்தமிழ்த் தேவை | | பழையவை யிரண்டுமே பாரதப் பாவை. |
|