|
236. வரலாற்றின் இன்றியமையாமை |
|
'விளக்குமாற்றை யெடுத்துக் கொள்ளடி' என்ற மெட்டுவகை |
1 |
| வீட்டிற்குரிமை பெற ஆவணமே - ஒரு | | நாட்டிற்கு மெய் வரலாறெனுமே | | தமிழ்நாட்டிற்கிது வரை - ஏட்டிலில்லை (வீட்) |
|
2 |
| தமிழ்நாட்டு வரலாறுதனை யுடனே - மிகத் | | தக்காரே எழுதுதல்தான் கடனே | | தனிக் - கட்சியாளர் பழு துற்றகோளர் (வீட்) |
|
3 |
| எழுதத் தகுவார் என்றும் தமிழன்பரே - பிறர் | | ஏறுமாறா யெழுதும் வம்பரே | | வடமொழிவெறியார் தமிழ் - வழியறியார் (வீட்) |
|
4 |
| வரலாறின்றி விடுதலை யில்லையே - அது | | வரும்வரை தமிழர்க்குப் பெருந்தொல்லையே | | இதை - வற்புறுத்தும் அது - நற்பொருத்தம் (வீட்) |
|
5 |
| தமிழறியாதவர் தமிழ்நாட்டையே - என்றுந் | | தாங்கி நடத்துகை தருங் கேட்டையே அவர் தந்நலமே | | கொள்வர் - இந்நிலமே (வீட்) |
|