|
து. ப |
| அனைத்திந் தியமொழி நிலையாக | | அறிவியல் மிகும்ஆங் கிலமாக | | இணைத்த நிலங்களில் துணையாக | | இயலும் வழிமொழி அதுவாக (தலைமை) |
|
241. ஆங்கிலம் இன்றி அறிவியல் இல்லை |
|
'ஏர் முனைக்கு நேர்' என்ற மெட்டு |
ப. |
| ஆங்கிலம் இன்றேல் இங்கே அறிவியல் இல்லை | | அறிவியல் இன்றேல் இங்கே உரிமையும் இல்லை |
|
உ. |
| ஆங்கிலம் இங்கே வருமுன் அடிமைஎம் முன்னோர் | | ஆங்கிலத்தால் மாந்தரென ஆயினார் அன்னோர் | | ஆங்கிலரே நீங்கியபின் மீண்டும் எம்மனோர் | | அடிமையாக வந்ததிந்தி ஆளவே என்நேர்? (ஆங்கி) | | என் நேர் - என்ன முறை? |
|
242. தமிழைக் கல்லாமைக்குப் பற்றின்மையே கரணியம் (காரணம்) |
|
'ஆடிப்பாடி வேலை செய்தால்' என்ற மெட்டு |
ப. |
| தாய்மொழிமேல் நேயங்கொண்டால் தடையொன் றிராது - அதில் | | தகுந்த சொல்லை அறிவதற்குத் தயக்க மிராது. |
|
உ.1 |
| சேய்மைநிலத்து மொழியும் வெட்கை சிறந்து கற்கும் நிலைமை - அதிற் | | செறிந்தபல்லா யிரஞ்சொற்களைத் தெரிந்து நிற்கும் எளிமை (தாய்) |
|