பக்கம் எண் :

202இசைத்தமிழ்க் கலம்பகம்

2
பிழைக்கும் வழியும் பெருஞ்சம்பளமும் பெயர் மதிப்பதிகாரம் மிகத்
தழைக்கும் வழியே தமிழில் இல்லை தாழ்வுதானிது பாரும்
(தாய்)
3
ஆட்சிமொழியென் றாகிவிட்டால் அரியதென்னும் தமிழும் - மிக
மாட்சிமையாம் அதையே பயிலமனமும் நன்றாய் அமிழும்
(தாய்)
243. சாமிநாதையர் பதிப்பு
பண் - தோடி
தாளம் - முன்னை
ப.
சாமிநாதையர் மதிப்பே சாற்றும் பதிப்பே
து. ப.
தேமுறு தமிழ்நூலைத் திருத்தியே பதித்தவர்
தாம் உறுதவப் பலர் தம்முளே தலைக்கிவர்
(சாமி)
உ.1
ஏமுறு பாடங்கொள்வும் இலகருஞ் சொல்லொழுங்கும்
ஏனைப் பாடக்குறிப்பும் இயலொப்புமை மேற்கோளும்
வேமுறு பசியினர் விரும்பும் உணவை யெல்லாம்
விரவியுண்ணும் அளவில் வேறு வேறிட்ட போலும்
(சாமி)
2
தென்கலைச் செல்வன் சென்னை மண்டலக் கல்லூரியில்
தென்மொழித் தலையெனத் திகழ்ந்தபெரும் பேராசான்
பண்டிதன் பண்டாரகன் என்று பெரிதாய்ச் சொல்லும்
பட்டம் பதவியெல் லாம்சற்றும் தேவையே யில்லை
(சாமி)
3
நூற்பதிப் போரெல்லாரும் நோக்க பதிப்புக்கலை
நுண்தொழில் திறனெல்லாம் பண்படும் தனிமேற்கே
பார்ப்பதற் கழகாப் பட்டுக்கட் டடஞ்செய்யும்
பரிசுப் பதிப்புகளும் பயனில்லை படிப்பார்க்கே
(சாமி)