பக்கம் எண் :

204இசைத்தமிழ்க் கலம்பகம்

5
        அமையக் கல்லா மடமை
        அமைக்கும் சட்டம் முடமே
        தமிழைக் காக்கும் கடமை
         தமிழ ரல்லா ரிடமே
(இதென்ன)
245. பாண்டியர் தமிழ்க்கழகம் வேண்டியதாதல்
'இந்த வுலகில் இருக்கும் மாந்தருள்' என்ற மெட்டு
ப.
பண்டை யுலகில் இருந்த பாண்டியன்
     பைந்தமிழ்க் கழகமே வேண்டும் - (தூய)
து. ப.
இன்றே நேர்ந்துள குழுவில் ஈர்ந்தமிழ்
இறந்து படுவதே தோன்றும் - (தமிழ்)
(பண்டை)
உ.1
தமிழில் ஆர்வமும் தகுந்த புலமையும்
     தாங்கிய முதியவர் இன்றே - (புலமை)
குமரிமுதல் வடகோடி வரையுமே
     கூடுக தொகைவரம் பின்றே - (இன்றே)
(பண்டை)
2
தீய பகைவரின் வகையுந் தமிழுக்கே
     தெரியின் எத்தனை தமிழா - (அந்தோ)
தேங்கு பல்கலைக் கழகம் அரசொடு
    தீங்கு செய்திடின் தவிர்க்க - (தமிழ்க்கே)
தூய தமிழ்ப் பெயர்த் தொடர்பு கொள்ளுக
     தோன்றும் இடம்பொரு ளெல்லாம் - (இங்கே)
தொல்ப ழந்திருக் குமரித் தீந்தமிழ்
     துலங்கி நிலவுக தமிழா - (மீண்டும்)
(பண்டை)