|
246. தமிழ் வரலாறு தமிழரே எழுதுகை |
|
'சந்தமா மயிலொடு' என்ற மெட்டு |
1 |
| சொந்தமா மொழியையே | | சொல்வர லாறின்றேல் | | வந்தெலா மொழியுமே | | வல்வழி மேலென்றாம். |
|
2 |
| இந்தமா நாட்டிலே | | ஏதிலர் ஆரியம் | | வந்ததே மாற்றியே | | வானவர் பேரிலே. |
|
3 |
| தேவரின் மொழியெனத் | | திண்பொழில் ஒன்றில்லை | | வாயதொன் றுளதெனின் | | வண்டமிழ் என்பதே. |
|
4 |
| முந்துதான் பேதைமை | | மூழ்கினர் தமிழரே | | இன்றுமேன் ஏதைமை | | ஏலவும் தெளியவே |
|
5 |
| தான்செயா வேலையே | | தவறுபு கெடுவதே | | ஈன்றமிழ் வாறுமே | | எழுதுக தமிழரே. |
|