| இனித்ததமிழ் நூல்கள்செய்யு ளெல்லாங் கரைகண்டும் |
| தனித்ததமிழ்ப் பற்றில்லெனில் தமிழன்என லாமோ |
| பனித்ததுளி யேனும்தமிழ் படியாதவ னெனினும் |
| அனித்தமெலித் தமிழ்கொள்பவன் அவனேநல்ல தமிழன். |
| அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலம் |
| குமரிநா டிருந்த ஞான்றே குடிபுகுந் திந்நாள் காறும் |
| தமிழையே பேசினாலும் தமிழரோ அதனைக் காய்வார் |
| இமிழ்திரை கடலுக் கப்பால் எனையசே ணாட்டா ரேனும் |
| அமிழ்துறழ் தமிழைப் போற்றும் அன்பரே தமிழர் கண்டீர் |