|
உ. 1. |
| பண்டுநக் கீரன்பின்னே பரஞ்சோதி சிவஞானம் | | பரவிய சுந்தரம் பண்பட்ட பூரணலிங்கம் | | மண்டிய பரிதிமால் மறைமலை நீலாம்பிகை | | மாணிக்கம் துடிசையார் மகிழ்நன் நமச்சிவாயம். (என்றுமே) |
|
2 |
| காசுவேங் கடசாமி கதிரேசன் இராமசாமி | | கரந்தை யுமாமகேசன் கழகத் திருவரங்கம் | | ஆசறு கலைகளும் ஆட்சியும் தமிழிலே | | அமைசுப்பிர மணியம் அருஞ்சாமி வேலாயுதம் (என்றுமே) |
|
3 |
| ஆபிரகாம் பண்டிதர் அண்ணா மலையரசர் | | அரியபாணர் கைவழி வரகுண பாண்டியனார் | | சோமசுந் தரம்கந்த சாமி வரதநஞ்சை | | சொல்லரும் புரட்சிப்பா வல்லன் பாரதிதாசன் (என்றுமே) |
|
4 |
| ஆங்கிலத் திற்குறளும் அருந்திரு வாசகமும் | | அழகிய நாலடியும் மொழிபெயர் போப்பையரும் | | ஈங்குள திரவிட இனம்படு மொழிகளின் | | இயல்புறும் ஒப்பியலை இயற்றிய கால்டுவெலும் (என்றுமே) |
|
261. அ. இராமசாமிக் கவுண்டர் |
|
பண் - காப்பி தாளம் - முன்னை |
ப. |
| சேலங் கல்லூரித் தலைசிறந்த முதல்வர் என்றும் | | சாலும் புகழ்இராம சாமிக் கவுண்டர் அன்றோ. |
|
து. ப. |
| ஞாலமுழு தும்தமிழ் நன்கு பரவஅடி | | கோலவந் தவரென்று கூறுதல் மிகையுண்டோ (சேலங்) |
|