|
266. மதுரை எழுத்தாளர் மன்றம் |
|
பண் - தோடி தாளம் - ஈரொற்று |
|
ப. |
| மதுரை எழுத்தாளர் மன்றம் | | மதியர் தமிழே வதியுங் குன்றம் |
|
து. ப. |
| கதிரை நிகரும் புகழே மண்டும் | | கருமுத்து தி. சுந்தரமே கொண்டும் (மதுரை) |
|
உ. |
| உரைவேந்தர் துரைசாமி யிலங்கும் | | ஒளிர்பண்டாரகர் சுந்தரம் பிறங்கும் | | வரைமனோகர கருணையர் தங்கும் | | வல்லரண் தமிழ்ப்பாவை யரங்கும் | | கரைதவிர் மொழிக்கடலிற் கலங்கும் | | கலங்கரை விளக்கெனவே விளங்கும் | | திரைகடலடித் திரக்கித் துலங்கும் | | திருமுத்துக்களைத் தெரிந்து வழங்கும் (மதுரை) |
|
267. செட்டிகுளம் |
|
பண் - பூரிகலியாணி தாளம் - முன்னை |
ப. |
| செந்தமிழ்க்குச் சிறந்த செட்டிகுளம் - அங்குச் | | சிறுவர்க்கும் பெருந்தகைக் கெட்டியுளம். |
|
து. ப. |
| முந்துமு மதுநாக முத்துவளம் - பெற | | முற்றியே தமிழ்வெற்றி பெற்ற களம் (செட்டி) |
|
உ. |
| இந்தி வடமொழிகள் ஏகஇன்னே - நல்ல | | இன்பத் தமிழ்கிளர்ந்தே எழுக முன்னே | | செந்திறம் தமிழரும் சேர்க மன்னே - நீடிச் | | செம்மலாம் பச்சைமுத்துச் செறிக பொன்னே (செட்டி) |
|