பக்கம் எண் :

224இசைத்தமிழ்க் கலம்பகம்

270. தமிழ்ப் பெருங் கழகம்
பண் - சங்கராபரணம்
தாளம் - முன்னை
ப.
தமிழ்த் தனிப் - பெருங் கழகந்தான்
தமிழ் தமிழ் தமிழ்எனக் கமழுங்காண்.
உ.1
தனித்தமிழ்ப் புலவர் சேந்தமாங் குடியார் தருக்கிய தமிழடியார்
முனைத்தமிழ்க் கழகம் முகிழ்தரு கிளையை முசிறியில் தோற்றுவித்தார்
திருத்துவத் துறையில் திகழ்தமிழ்க் கழகக் கிளையது தோற்றியபின்
திருச்சிவட் டகையும் பெருத்த கிளையின்பின்
     உறுதமிழ் நிலக்கழகம்
(தமிழ்)
மறைமலை யடிகள் மனமகிழ் கனவும் மதியழகரின் வினவும்
நிறையுயிரிழந்தார் நிலைபெறு நினைவும் நிறைவுற நிகழ்நனவும்
பிறையென வளரும் பிழிநறுந் தமிழும் பெருந்தமிழ்க் கழகமுமே
துறைதொறும் இனிய தூயநல் தமிழ்ச்சொல் தோன்றுக வளமுறவே
(தமிழ்)
271. பண்டாரகர் மெ. சுந்தரம்
1
திரு-மதுரையில் முதுதமிழ் புதுமைசெய் மதியர் மெ. சுந்தரம் அன்றோ
       சுந்தரம் அன்றோ - மை
       மந்திரம் உண்டோ
(திரு)
2
கலைத் - தலைவரொ டிலக்கியத் தலைவர்மெய்ப் பொருள்துறைப் பண்டாரகரே
       பண்டாரகரே - தமிழ்
       கண்டார் அவரே
(திரு)