|
2 |
| இந்தி யிங்கே ஆட்சிசெய வந்த பின் நாம் - இனி | | என்றுமே அடிமையராய் இருந்திடுவோம் . (இள) |
|
3 |
| இன்றிருந்து நாளை மாளும் மந்திரிமார் - தான் | | என்சொலினும் வாய்மொழியை நம்ப வேண்டாம் (இள) |
|
4 |
| ஆங்கிலமே ஆட்சிமொழி யாகும்வரை - நீர் | | ஆன்றமுறை வேண்டுவீரே ஆண்டவனை. (இள) |
|
304. குடியரசு குடிகளின் அரசு |
|
'சுயராசியம் அதிகத் தூரமில்லை' என்ற மெட்டு வகை |
ப. |
| குடியர சென்பது குடிகளின் அரசே | | குடியுரி மைதருங் கொடை முரசே. |
|
து.ப. |
| தடியடி யரசும் தற்கொலை விரசும் | | சுடுகொலை யரசும் கொடுவரசே. (குடி) |
|
305. மங்களம் |
‘நீநாமரூப முலகு' என்ற மெட்டு |
பண் - சௌராட்டிரம் தாளம் - முன்னை |
ப. |
| எல்லாரும் இன்பமுறவே இறைவ னருளால் மங்களம் |
|
து.ப. |
| பொல்லாப் பகையும் பசியும் பிணியும் | | இல்லாமல் எங்கும் நன்கனம். (எல்லாரும்) |
|