பண் - (சிந்து பைரவி) தாளம் - முன்னை |
1 |
| ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தே | | அறியாமை மீதூர அடிமையாய்த் தளர்ந்தே | | சீரிய கோமகன் சேயைநீ யுணர்ந்தே | | செந்தமிழ் பொழியினால் தேறுவை யணர்ந்தே. |
|
2 |
| ஆங்கில வரசினால் அகக்கணுந் திறந்தே | | அறிவினால் மறுமுறை அகமதிற் பிறந்தே | | ஈங்குநல் லாட்சியை யேற்றினை சிறந்தே | | ஏதிலர் ஏமாற்றை எதிர்த்தனை விறந்தே. |
|
3 |
| ஈரடி மைத்தனம் ஈங்கிருந் தனவே | | இவற்றுளே ஆரியம் எரியள றெனவே | | சாரயல் ஆங்கிலம் சாய்ந்ததும் கிழமை | | சாணள வேறியே சறுக்கின முழமே. |
|
4 |
| விடுதலை புகுந்ததாய் வியந்தனை புகழ்ந்தே | | | | விழுத்தமிழ் அரணையே வீழ்க்குவை அகழ்ந்தே | | அடிதலை தடுமாறி அறிவுரை யிகழ்ந்தே | | அவலைநி னைத்துரலை இடித்தனை மகிழ்ந்தே. |
|
5 |
| தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை | | தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை | | இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே | | எமதுமெய் வரலாறே எழுகவே வலமே. |
|
6 |
| சிவநெறி மால்நெறி செந்தமிழ் நெறியே | | செம்மையிற் சிவனடி சேரவே குறியே | | அவமுற வடமொழி அறைவது வெறியே | | அதுதெய்வ மொழியெனல் அறியாமை அறியே. |
|