|
59. மொழித் திருத்தத்தின் தேவை |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
| மொழியென்ப தொருவன்றன் உளமுள்ள நினைவேனோர் | | உணரச்செய் ஒலியென்பதே | | வழுவென்றும் இயலென்றும் தமிழென்றும் பிறிதென்றும் | | வரைசெய்தல் தகுமோ என்பார். |
|
2 |
| உணவென்ப தொருவன்றன் பசிதீர எதும்வாயுள் | | இடலாகும் பொருளென்பதோ | | மணமுள்ள சுவையான பதமாக நலமேவ | | முறையோடும் விளைவுண்பதோ. |
|
3 |
| உயிரெல்லாம் உணவாடை உறையென்னும் இவைமூன்றும் | | ஒருதன்மை யெனவாகுமே | | உயர்வான திணையென்னும் மகனோதன் வினையெல்லாம் | | உயர்வாகச் செயல்வேண்டுமோ. |
|
60. தமிழ்க் கல்விப் பயன் |
|
'எனக்குன் இருபதம் நினைக்க வரமருள்வாய்' என்ற மெட்டு |
பண் - (சௌராட்டிரம்) தாளம் - முப்புடை (திரிபுடை) |
ப. |
| தனித்த மொழி யெனும் இனித்த தமிழ்அறிவாய் - பண்ணாருந் தெய்வத் | | தனித்த மொழி யெனும் இனித்த தமிழ்அறிவாய் |
|
உ.1 |
| பனித்த குமரியில் துனித்த துறவியல் | | முனித்தவரை யுளங் கனித்துலகு நடுக் | | குனித்த சிவனுங்க வனித்தறிவரொடு | | நுனித்த இசைநடத் துனிப் பயிலுமுத் (தனித்த) |
|