பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்53

2
மறந்தும் இயல்நெறி பிறழ்ந்து வரலறக்
    கறந்த நிலையெனத் திறந்த வுளமொடு
சிறந்த நடையினில் அறந்தழுவு முதற்
    பிறந்த மொழியெனப் புறந்தரவுமே
(தனித்த)
3
ஏழை நிலைமையிற் கோழை மனமொடு
    தாழுந் தமிழநீ வாழவுலகினில்
வேழ மலையவன் சோழ வளவன்நீ
    டூழி தழுவிய பூழியனிசை
(தனித்த)
4
மொழிகள் பெருகிய வழிக ளறியக
    விழிபெ றவுமிக இழிவு தரும்பல
பழிகள் அடியொடும் ஒழிய நறுங்கனிப்
    பிழியும் நிகரறு செழிய நறவத்
(தனித்த)
5
கவலை மிகவரும் அவல மறவெதும்
    உவமை யிலனிரு கவினடி தொழுது
துவர உலகியல் தவிரும் உயரிய
    தவவலி மைதரு சிவம துறவும்
(தனித்த)
61. மொழி நாகரிகம்
'தாயினுஞ் சிறந்தது தமிழே' என்ற மெட்டு
1
நாகரிக முறையில் வினையே - செயும்
    நன்மக்களே யிங்குயர் திணையே
ஆகுடம்பால் அந்நிலை தனையே - என்றும்
    அடைவதில்லை வேந்தனும் தினையே.