பண் - (காப்பி) தாளம் - முன்னை |
ப. |
| கோயில் வழிபாடுகள் தாய்மொழியிற் செய்யினே | | வாய்மையாகும் அதனை ஆயுமின் நீரே |
|
து. ப. |
| தூயமொழி யென்றேனைத் தேய மொழியிலே | | வாயிலும் அயலவன் ஆயினென் சீரே - கோ. |
|
உ.1 |
| தந்தையோடே பிள்ளை தானுரை யாடவும் | | வந்திடை நிற்பனோ மற்றொரு மொழியன் | | முந்திய இறைவனை முன்னியே தொழவும் | | பிந்திய செயன்மொழிப் பட்டனோ வழியன் (கோயில்) |
|
2 |
| கொஞ்சமுந் திருந்தாத குழந்தையின் மழலையே | | கொண்டாடி மகிழ்ந்திடும் தந்தையும் பாரும் | | எந்தொரு கல்வியும் இல்லாதான் மொழியே | | எம்பெரு மானுக்கும் இன்பமாம் தேரும் (கோயில்) |
|
3 |
| கும்பிடும் அடியவன் நம்பனை வழுத்தலும் | | கோருவ கூறலும் குலவுதாய் மொழியே | | முன்பெதுந் தெரியாத வன்புறு மொழியில் | | முன்னாத பொருள்பிறன் முரலுதல் பழியே (கோயில்) |
|