பக்கம் எண் :

சுட்டு வேர்ச்சொற்கள்24

முதிர்ந்து பாழ்படுதல் என்னும் பொருளில் கிழ என்னும் சொல் கெடு என்று திரிந்தது எனினும் பொருந்தும்.

6. விருப்பக்கருத்து: வீ. வீதல் = கீழ்ப்படல், விழுதல், இறத்தல், முடிதல். வீ = மலரில் விழும் வண்டு, மரத்தினின்று விழுந்த மலர். வீ = வீழ் - விழு; விழு - விகு - விகுதி = முடிவு, ஈறு. விகு - விகுதம் - வீதம். விழு - விழுக்காடு = வீதம்.

ஒ.நோ: தொழு - தொகு.

வீழ் - வீழ்து, விழுது. வீழ் - வீடு - வீட்டு. விழு - விழல் = கிழங்கு விழுந்த கோரை, வீண்.

விழு - A.S. feallan; Ger. fallen; E. fall.

வீழ் - வீண். விழல் - வீழல்

வீழ்தல் = ஒரு பொருளின்மேல் விழுந்தாற்போல அதை மிக விரும்புதல்; Cf. E. to fall in love with. "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிது கொல்"(குறள். 1113).

விழு - விழும் - விரும் - விரும்பு; விரும் - விருந்து = விரும்பியிடும் உணவு, அதை உண்ணும் புத்தாள், புதுமை. விழு - விழை; விழைதல் = விரும்புதல்; Gk. philos, love.

விழை - விழாய் - விடாய்; விடாய். விருப்பம், தாகம், ஆசை, களைப்பு. விழை - விழா - விழவு. விழா = விரும்பிச் செய்யப்படும் சிறப்பு . விழு - விழும் - விழுமம் - விழுப்பம் = சிறப்பு. சிறப்பு என்னும் சொல்லுக் கிருப்பதுபோன்றே விழவு என்னும் சொல்லுக்கும் கொண்டாட்டம், பெருமை என்னும் இருபொருளுமுண்டு. விழை - வெள் - வேள் = விரும்பு. வெள் - வேள் - வேண்டு = விரும்பு. வெள்கு - வெஃகு = விரும்பு.

E. want,Ice. vanta,to be wanting.

வேள் + து - வேண்டு. வேள் - வேள்வி = ஒரு பொருளை விரும்பியிடும் பலி. வேள் + உம் - வேளும் = வேண்டும் (தன்மை நிகழ்கால அல்லது எதிர்கால வினைமுற்று). வேள் + கை - வேட்கை = விருப்பம், தாகம். வேள் - வேண். வேண் + அவா - வேணவா. வேள் - வேளாளன் - வேளாண்மை. வேள் = விருந்து. கவேள்வாய் கவட்டை நெறிக (பழ. 360). வேள் + ஆட்டி - வேளாட்டி. வேளம் = வேளாளப் பெண்டிர் சிறைக்களம். வேள் = விரும்பப்படுகிறவன், தலைவன், குறுநிலமன்னன். வேள் = விருப்பத்தை (காதலை) யுண்டாக்கும் காமன், கன்னிப் பெண்டிர்க்குக் காதலையுண்டாக்குபவனாகக் கருதப்பட்ட முருகன் (’வேலன் வெறியாடல்’ என்னும் அகப்பொருட்டுறையைப் பார்க்க.) வேள் - வேளான் = முருகனை வழிபடும் குயவன். வேள் + தம் - வேட்டம். வேள் + தை - வேட்டை.

வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடன். விரும்பிச் செய்யப்படு வது வேட்டம்; L. venor, to hunt. வெள் - வெய். வெள் - வெம். "வெம்மை வேண்டல்" (தொல். 818).