பக்கம் எண் :

சுட்டு வேர்ச்சொற்கள்25

விருப்பத்தைக் குறிக்கும் வெம்மைச் சொல்லும் வெப்பத்தைக்

குறிக்கும் வெம்மைச் சொல்லும் வெவ்வேறாகும். எனது மொழிநூலில் திருத்திக்கொள்க.

வெய்ய = விரும்பத்தக்க. வேண்டுவான் = வேண்டுமென்று.

M. E. wantowen, from wan, to want, E. wanton, adj. and n.

வேள் - வெள் - பெள். பெட்டல் = விரும்பல். பெட்பு = விருப்பம்.

"பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்" (தொல். களவு. 11)

பெள் + தை - பெட்டை - பெடை - பேடை - பேடு. பேடு - பேடன், பேடி, ஆண்டன்மையுள்ள பெண் பேடன்; பெண்டன்மைள்ள ஆண் பேடி. பெள் + து - பெட்டு.

Celt., - Ir. peat; Gael. peata, E. pet, anyone fondled.

பெள் - பெண் - பேண். பெண் = விரும்பப்படுபவள். பேணுதல் = விரும்புதல், விரும்பிப் பாதுகாத்தல். பெள் - பிண் - பிணை, பிணா, பிணவு. பிணவல், பிடி.

"பிணையும் பேணும் பெட்பின் பொருள" (தொல். 822)

இ - சிந்து. சிந்துதல் - மேலிருந்து கீழ் விழுதல், வீழ்த்தல், ஒருவரைக் கீழே வீழ்த்தல் போல் அழித்தல். E. shed.

(7) எழுகைக்கருத்து: இவ - இவர். இவர்தல் = ஏறுதல். இவ - நிவ. நிவத்தல் = உயர்தல். கிள் - கிளம் - கிளம்பு. கிளம்புதல் = ஒரு பொருள் தன்னிடத்தினின்று எழுதல், பெயர்தல். கிளம் - கிளர். கிளர்தல் = மேலெழுதல், மகிழ்தல். கிளர்ச்சி = எழுச்சி, மகிழ்ச்சி.

L. hilaris; Gk. hilaros - hilaos, gay, cheerful; E. hilarious, gay, E. exhilarate, to cheer, ex intensive. நிமிர்தல் = எழுந்து நேராயிருத்தல்.

குறிப்பு: இங்குக் கூறிய இகர முதற் சொற்களை எகர முதற் சொற்களின் திரிபாகக் கொள்ளவும் இடமுண்டு.

3. ஊகாரச்சுட்டு

(1) முன்மைச்சுட்டு (Forwardness and Motion)

ஊகாரத்தை ஒலிக்கும்போது வாய் முன்னோக்கிக் குவிவதால் ஊகாரச்சுட்டில் முன்மைக் கருத்தும் குறுஞ்சேய்மைக் கருத்தும் தோன்றின.

குறுஞ்சேய்மை

ஊ = உந்த (உது, உவை).

ஊது - உது - உதா - உதோ - உதோளி.