முன்மை சேய்மைக்கும் அண்மைக்கும்
பொதுவாதலால், இந்தியில் உகரச்சுட்டு நெடுஞ்சேய்மையைக் குறிக்கும். எ-டு: உதர் = அங்கே.
தமிழில் சேய்மைச்சுட்டுத் தனியாயிருப்பதால்,
உகரச்சுட்டுச் சேய்மைக்கும் அண்மைக்கும்
நடுவிடத்தையே அல்லது குறுஞ்சேய்மையையே குறிக்கும்.
உம் - உம்மை = முன்மை, குறுஞ்சேய்மை.
ஊ - உவ். உவள் - உவண் - உவ்விடம்.
ஊன் < உவன். ஊம் - உவம்.
உவன், உவள், உவர், உவ - உவை.
உல் +து - உஃது, உற்று (வழக்கற்றது).
(2) முன்னிலைப்பெயர்
முன்னிலைப்பெயர் முன்னாலிருப்பவரைக்
குறிக்கும் பெயராதலால், முன்மைச்சுட்டிலும்
தோன்றிற்று.
ஊன் < யூன்) < நூன் (ஒருமை).
ஊம் < யூம் < நூம் (பன்மை).
முற்செலவுக்கருத்து
உகை = முற்செலுத்து L.ago,
Gk. ago, to put in motion; Skt. aj, to drive.
உந்து = முன்னுக்குத் தள், தள். உந்தி =
வயிற்றிலிருந்து காற்றைத் தள்ளுமிடம்,
கொப்பூழ்.
"உந்தி முதலா முந்துவளி தோன்றி"
(தொல். 83)
உந்தி - உதானன் = உந்தியினின்றெழும்
காற்று.
உந்தல் - உஞ்சல் - ஊஞ்சல் - ஊசல் -
ஊயல்.
L. oscillium, a swing, E. oscillate, to swing.
உதை = (முத.) காலால் முன்னுக்குத் தள்.
உய் = முற்செல், முற்செலுத்து, முற்சென்று தப்பு. உய்
- ஒய் = முற்செலுத்து.
"உமணர் உப்பொ யொழுகை" (புறம்.116)
உய் - உயிர் = உடம்பைச் செலுத்துவது.
இனி, உள் - உய் - உயிர் (உள்ளிருப்பது) என்றுமாம்.
உய் - உயம் - வியம். வியம் =
செலுத்தல், தேரோட்டுதல் (ஐங்.), வினைமேற்
செலுத்தல், ஏவல். வியம் + கொள் - வியங்கொள் -
வியங்கோள் = மதிப்பான ஏவல்.
ஊங்கு - ஊக்கு = முற்செலுத்து. ஊக்கல் =
உள்ளத்தை அல்லது ஒருவனை ஒரு வினையின்மேற்
செலுத்தல். ஊக்கம் = வினைமேற் செல்லும் மனம்,
தளரா மனம். ஊக்கு - நூக்கு = முன்னுக்குத் தள், தள்.
ஊர் (வி.) = முற்செல், செலுத்து,
ஏறிச்செலுத்து, ஏறிச்செல், மெள்ளச் செல்.
முதுகிற் பாரமுள்ள விலங்கு மெள்ளச்செல்வது இயல்பு.
ஊர்தி = வாகனம்,
|