ஊர் (பெ.) = ஊர்தியிற் கொண்டு
போகப்படும் கூண்டு அல்லது குடில், குடில் அல்லது வீடு,
வீட்டுத்தொகுதி.
ஒ.நோ: நகர்தல் = மெள்ளச்செல்லல்.
நகர் = வீடு அல்லது அரண்மனை, ஊர். இன்னும்
நாடோடிகள் (nomads)
மாடு குதிரை முதலியவற்றின்மேல் தங்கள் குடிலைக்
கொண்டுபோவதையும், சில இடங்களில் ஒரே வீடிருந்து
ஒற்றையூர் எனப்படுவதையும் காண்க.
ஆரியமொழிகளிலும் முற்செலவும்
ஊக்கலும்பற்றிய சொற்கள் சில
ஊகாரச்சுட்டடியாய்ப் பிறந்துள்ளன. O.Fr.
ussier, Fr. huissier, E. usher, to walk before, L. urgeo,
E. urge, to drive, to press ; Skt. urja. u =
ஊ, உ.
ஊகி = முன்னதாகக் கருது. ஊகி + அம் -
ஊகம் < யூக(வ.).
உன்னு = முன்னதாகக் கருது, நினை. உன்னம்
= நினைப்பு, கருத்து, பாவனை, தியானம், மனம்
(திவாகரம்). உன் - உன்னி, வடி பரநளள.
முன்மைக்கருத்து
ஊ = முன். ஊங்கு = முன்பு (இடமுன்னும்
காலமுன்னும்).
"முழவுத்தோ ளென்னையைக் காணா
வூங்கே" (புறம். 88)
சுட்டெழுத்துகளோடு பல மெய்கள் முன்னும்
பின்னும் சேர்வதால், பல சொற்கள்
தோன்றுகின்றன. ஒரு சுட்டெழுத்துடன் பல மெய்கள்
சேர்வதற் கிடமிருப்பினும், உதடு குவிவதாலுண்டாகும்
உகரத்துடன் உதட்டில் பிறக்கும் மெய்களாகிய
மகரபகரங்களே சிறப்பாகச் சேர்தற்குரியன.
பகரத்தினும் மகரம் எளிதும் இயல்புமானதாகையால்,
முன்மைச்சொல், இயன்மொழியான தமிழில்
மகரவடியாயும் திரிமொழிகளான ஆரியமொழிகளில்
பகரவடியாயும் தோன்றியுள்ளது.
L. pre, pro, Gk. pro, Skt. pra, before.
ஆயினும், இயக்கத்தை அல்லது
இடம்பெயர்வைக் குறிக்கும் சொல்லொன்று
ஆரியத்தில் மகரவடியாயுள்ளது.
L. moveo, to move, E.move, motion, motor, motive (that
which moves to acton.)
உயிரிகளின் இயல்பான செலவெல்லாம்
முன்னோக்கியதாதலால், முன்மைக்கருத்தில்
செலவுக் கருத்துத் தோன்றிற்று.
ஊ - உ- மு - முன்.
முன் = முன்னிடம், முன்புறம், முற்காலம்,
முன்மை.
முன்- முன்னு. முன்னுதல் = முற்பட
நினைத்தல், நினைத்தல். முன்னம் = நினைப்பு,
உள்ளக்குறிப்பு, குறிப்பு, மனம் (திவாகரம்).
முன்னம் - முனம் மனம். A.S.
munan, to think, Ger. meinen, to think.
மனம் - மனது - மனசு.
|