மண்ட = தீ நாவு (தெ.). "மண்டெரி
தான்வாய் மடுப்பினும்". மண்டு + அகம் - மண்டகம்
- மண்டபம் = மக்கள் மிகுந்திருக்கும் இடம்.
ஒ.நோ: வாணிகம் - வாணிபம்.
முள் - மூள்= பொருந்து, நெருங்கு, மிகு. மூள்
+ து - மூட்டு = (வி.) பொருத்து, மிகு; (பெ.) பொருத்து. மூள்
+ தை - மூட்டை = பொருத்திய சாக்கு அல்லது
பொட்டணம். மூட்டை - மூடை.
மூள் - மூழ் - மூடு - மூடி. மூள்- மூய் = மூடு. மூள்
= வாய் பொருத்து, மூடு. மூடு - மூடம் - மோடம் = வானம்
மூடி யிருக்கும் மந்தாரம், மந்தம். மூடம் - மூடன் =
மந்தன், அறிவிலி. மூழ் - மூகு - மூகன் = வாய் மூடினவன்,
ஊமை. மூகு - மூங்கு - மூங்கை - மூங்கா (இந்.) = ஊமை.
L. mutus, Fr. muet, E.mute, dumb.
முள் - முண்டு = மொட்டையானது, நுனி
தறித்தது, தறித்தது, துண்டு. ஒரு பொருள்
இன்னொன்றில் முட்டும்போது நுனியொடிந்து
மொட்டையாதல் காண்க. முண்டு - முண்டம் = முன்னும்
பின்னும் தறித்த கட்டை, கை கால் தலையற்ற உடம்பு.
முண்டு - முண்டி + தம் - முண்டிதம் = தலையை
மொட்டையடித்தல். முண்டி + அனம் - முண்டனம். முண்டு -
முண்டன் = துண்டானவன், மனைவியிழந்தவன். முண்டை =
கைம்பெண். ஒ.நோ: முறியன் = மனைவியிழந்தவன்.
முள் - மொள் - மொட்டை - மொத்தை -
மொத்தம் - மொத்தன் - மொந்தன் - பொந்தன்.
மொள் - மொட்டு - மொத்து = மொட்டையான அல்லது
பருத்த தடி, அதனால் அடி. மொத்து - மத்து. மொத்தை -
பொத்தை. மொத்தை- மொக்கை. மொத்து - பொத்து -
பூது - பூதம் = பெரியது, பெரும்பேய். இரும்பூது - இறும்பூது
= மிகப் பெரியது, வியக்கத்தக்கது. முள் - முழு - மழு -
மழுகு- மழுங்கு. முழு = மொட்டை, மொத்தம். முழு - முழுது =
மொத்தம், எல்லாம். முட்டு - முட்டை - மட்டை, ‘மழுமட்டை’
என்னும் வழக்கை நோக்குக. மொள் - மொண்டி -
நொண்டி = கைகால் மொட்டையானது அல்லது குறைந்தது.
நொண்டி - நொண்டு = ஒரு கால் இல்லாதவன் அல்லது
இல்லாதவன் போல நட.
முள் - முடம் - நுடம் = வளைவு. ஒரு பொருள்,
விதப்பாய்ப் பயிர் பச்சைகள், இன்னொன்றில்
முட்டின பின் வளைதல் காண்க.
முடம் - முடங்கு - நுடங்கு. முடம் - முடல் -
முடலை. முடம் - முடி- முரி - முறி. முரிதல் = வளைதல். முரி
- புரி = வளை. புரிசை = வளைந்த மதில்.
L. murus, a wall, E. muriform.
புரி = வளைந்த மதில், கோட்டை,
கோட்டைநகர், நகர், முறுக்கிய இழை அல்லது கயிறு.
புரி - புரசை. புரி - புரம்.
E. bury, borough, burg.
புர = நகரத்தைக்கா, கா.
|