பக்கம் எண் :

சுட்டு வேர்ச்சொற்கள்45

A.S. beorgan, Ger. bergen, to protect. from burg.

புரவலன் = அரசன். புரந்தர - புரந்தரன் = வேந்தன் (இந்திரன்).

E. spire, anything winding, L. spira, Gk. speira, anything wound round. புரி - புரு - புருவம் = வளைந்தது.

Cf. E. brow, L. frons, A.S. bru.

முரி - முறி - நெறி. முறி - முறு - முற்று = வளை, முதிர். முற்றும் = வளைய, முழுதும். முறு - முறுகு - முறுக்கு. முறு = முறம் = வளைந்தது. முறு - முறை = வளைவு, தடவை. ஊக.நு.வரசே. நெறி = வளை, சுருள், வளைந்த வழி. நெறி - நெற்றி = வளைந்தது.

Cf.L. frons = the forehead, brow. முடங்கு - மடங்கு.

முடி = வளை. முடிவடை, சா. மக்களும் பயிர்பச்சைகளும் வளைவது அவர்களின் முடிவைக் காட்டும். கதிரவன் வளைவும் அதன் ஒரு நாளை முடிவு காட்டுவதாம்.

ஒ.நோ: சாய் - சா. இற = வளை, சா. முடி - மடி = வளை, சா. மடி - மரி (வ.) ட-ர போலி.

A.S., Ger. - L. mor, Goth. maur, Skt.mri, to die.

முரி = முறி = வளை, ஒடி. வளைந்த பொருள் பின்னர் ஒடிதல் காண்க. முறி - மறி = வளை, மடக்கு.

முள் - முண்டு - முண்டி = வளைவு. முண்டி - மண்டி = வளைவு. மண்டியிடல் = காலை மடக்கியிருத்தல். முண்டு - மண்டு - மண்டல் = வளைவு. மண்டல் - மண்டலி - மண்டலம் - மண்டிலம் = வட்டம், வட்டமான பொருள்.

முள் - முழை = துளை. முழை - முழைஞ்சு = குகை. முழை - மூழை = அகப்பை. மூழை - மூழி = வெறுந்துளைக் காது. முழை - நுழை = முழைக்குட் புகு, நுண்ணிய இடையிற் புகு. முள் - முடு - மடு = துளைபோன்ற வாயில் வை, உண். மடு - மடை = குளத்தின் வாய், மடுக்கும் சோறு. மடைப்பள்ளி = சோறு சமைக்கும் அறை. மடு - மடம் = அறச்சோறுண்ணும் இடம்.

மடை (வாய்) - A.S. muth, E. mouth, Ger. mund, Dut. mond. kil மடை (உணவு) - E meat, anything eaten, food, A.S. mete, Goth. mats, Dut. met, Dan. mad.

முள் - நுள் - நுகு - நுகர் = துளைபோன்ற வாய்க்குள்ளிடு, உண், இன்பம் துய். நுள் - நள் - நடு - நடுவு - நடுவண் - நாப்பண்.

முள்- மூழ் - மூழ்கு - முழுகு - முங்கு = முழைக்குட் புகு, உட்புகு, நீர்க்குட் புகு, முழுகு:

L. mergo, mersum, E. merge, merse, Skt. majj.

முழுக்கு - முழுங்கு - விழுங்கு. நுள் - நுள்கு - நுங்கு = விழுங்கு, குடி. நுள் - நூழ் - நூழில் = துளையுள்ள செக்கு. ஒ.நோ: உரல் = துளையுள்ளது. நூழ்