ஒத்தி =
பொருத்தம் பார்க்கும் பயிற்சி, நிலத்தை
ஒருவனிடம் பொருத்திவைக்கும் அடைமானம். ஒப்பு +
ஊர் - ஒப்பூர். ஒப்புரவு = உயர்ந்தோரோ
டொப்பவொழுகல். ஒம்பு = மனத்திற்குப் பொருந்து.
ஒவ்வு = பொருந்து. ஒற்று = ஒத்து, பொருந்தியறியும்
உளவு.
ஒள் - ஒண் = பொருந்து, இயல். ஒண்ணும் =
பொருந்தும். சொல்லவொண்ணாத - சொல்லொணாத -
சொல்லொணா = சொல்ல முடியாத. ஒண் - ஒண்டு =
பொருந்து, ஒட்டு. ஒள் - ஒட்டு - ஒட்டம். ஒட்டு -
ஒட்டாரம் = பிடிவாதம்.
ஒல் = பொருந்து. ஒல் - ஒர் - ஒரு - ஓர்.
ஒருவு = ஒரு பக்கம் செல், நீங்கு. ஒருங்கு = ஒன்றாய்.
ஒதுங்கு = ஒரு பக்கம் செல். ஒத்து = ஒரு பக்கம் தள்.
ஒல் + து - ஒன்று.
L. unus, E. one.
ஒன்று - ஒன்றி - ஒண்டி (கொ.) ஓர் - ஓரம்
= பொருந்திய இடம், நெருங்கிய அண்மை. ஓர் =
பொருந்தி ஆராய், உணர், தெளி. ஒல்-ஒன் = பொருந்து.
ஒன்னார் = பொருந்தார், பகைவர்.
உள் = பொருந்து. உள் - அள் = பொருந்து,
நெருங்கு. அளி = செறிந்த வண்டு, குழம்பிய சேறு. அள் -
அள்ளு = விரலை அல்லது கையைக் கூட்டியெடு, கூட்டிய
கைபோல் உட்குவிந்த கலத்தால் எடு. அள் - அள =
அள்ளி அல்லது பொருத்தி மதி. அள் - அளி =
அள்ளிக்கொடு, கொடு. அளி = கொடை, அருள். அள் -
(அய்) - அயல் = அண்டை, பக்கம், புறம். அள் - (அரு) -
அருகு.
அள் - அண் - அண்ணு = பொருந்து, நெருங்கு.
அண் - அணுகு -அணுக்கம். அண் - அணி = நெருங்கு,
உடம்பில் ஒட்ட இடு, உடு. அண் - அண - அணவு = பொருந்து.
அண் - அணை = பொருந்து, தழுவு, தழுவித் தடு. அணை =
நீர்த்தடை. அணை - அணைசு = பொருந்தும் பூண் அல்லது
கிண்ணம். அண் - அண்டு = நெருங்கு. அண்டு - அண்டை.
அள் -அட்டு = பொருந்து, ஒட்டு. அட்டு -
அட்டை = ஒட்டிக்கொண் டிருக்கும் புழு.
அண் - அடு. L.
ad, Goth. at, E. ad, at Celt. ar.
அடு - அடுக்கு. அடு - அடை - அடைவு - அடவு -
அடகு. அடு - அடர்- அடவி < Skt.
atavi.
அள் - நள் = பொருந்து, நெருங்கு. நள் + பு -
நட்பு. நள் - நண் + பு - நண்பு. நண் - நண்ணு - நணுகு. நள் -
நளி = நெருக்கம், செறிவு. "நளிஎன் கிளவி
செறிவும் ஆகும்" (தொல். 867). நள் - நாள் =
செறிந்த உடு, நாண்மீன், உடுவிற்குரிய நாட்காலம்.
நள் - நளி - நனி = செறிவு, மிகுதி.
உள் - ஒள் = துளை. ஒள் - (ஒளுகு) - ஒழுகு =
துளையிலிருந்து விழு, நீள், நட. ஒரு பொருள்
ஒழுகும்போது நீட்சி யுண்டாகும்; நடத்தல்
ஒருவகையில் நீட்சியாகும்.
|