"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்பும் நெடுமையும் செய்யும்
பொருளக" (தொல்.
801)
ஒழுக்கம் = நடக்கை, வரிசை. ஒழுக்கு -
ஒழுங்கு = நீட்சி, வரிசை, முறை. ஒழுகு - E.
leak (முதற்குறை.) ஒள் - ஓட்டை = துளை.
Walk என்னும் ஆங்கிலச்
சொல் ஒழுகு (நட) என்னும் தமிழ்ச்
சொல்லை ஒலியாலும் பொருளாலும்
ஒத்திருக்கின்றது. ஆயினும், ஆங்கில அகராதியில் (A.S.)
wealcan (to roll, turn) என்னும் பகுதி
காட்டப்பட்டிருப்பது பொருத்தமே.
ஒழுங்கு - L. longus,
Ger. lang, A.S. lang, E. long; found in all the Teut.
Languages.
ஒள் - ஒண் - ஒடு - ஓடு. ஒடு, ஓடு = பொருந்த,
கூட (3ஆம் வே.உ.)
உ - உள் = பொருந்து. உள் - உடம் -
உடங்கு - உடக்கு. உடம் - உடன் - உடல். உடம் -
உடம்பு. உடம் - உடந்தை.
உடம்படு - உடம்பாடு. உடன் = பொருந்த,
கூட (3ஆம் வே .உ.). உடல், உடம்பு = உடனிருக்கும் கூடு.
உடம் - உடமை = உடனிருக்கும் பொருள். உடமை - உடைய
(பெ.எ.) = உடனுள்ள, உடமையாகக் கொண்ட. உடைய - உடை
குச.னந. உள் - உரி - உரிமை. உரி - உரித்து = உரிமை.
Cf. O. Fr. heir, L. heres, E.heir, one
who inherits, E. herit, to take as heir, Fr. heriter.
உள் - உடு = உடலொடு பொருந்த அணி. உடு - உடை.
உள் - ஒள் = பொருந்து , உட்படு, ஒடுங்கு.
ஒச்சட்டை - ஒஞ்சட்டை = ஒல்லி. ஒச்சி - ஒஞ்சி -
ஒசி = ஒடுங்கு, நாணு. ஒடுங்கு = அடங்கு. ஒல் - ஒல்லி.
ஒல் - ஒல்கு - ஒற்கம்.
ஒ-ஓ = பொருந்து. ஓ + இயம் - ஓவியம் =
ஒப்பு, ஒன்றற்கொப்பாக எழுதும் சித்திரம்.
சுள் என்னும் அடி
சுள் = (முற்சென்று) ஊசிபோற் குத்து,
குத்துவதுபோற் சுடு, சுடுவதுபோல் உறை, சுடுவதுபோற்
கோபி. சுள்சுள்ளென்று குத்துகிறது, சுள்ளென்று
வெயிலடிக்கிறது, சுள்ளென்று உறைக்கிறது என்னும்
வழக்குகளை நோக்குக. நெருப்புச் சுட்டத்தைப்
பொத்துப்போயிற்று என்பது வழக்கு. பொத்தல் =
துளைத்தல். நெருப்பினாற் கருகும் பொருள்
சுருங்குவதாலும் நெருப்புப் பிழம்பான கதிரவன்
வட்டமாயிருப்பதாலும், சிறுமைப்பொருளும்
வட்டப்பொருளும் சுள் என்னும் அடிக்குண்டு.
உறைப்புப்போலப் புளிப்பும் ஒரு கடுத்த
சுவையாதலால், புளிப்பையும் சுள்ளென்னும் அடி
குறிக்கும்.
Cf. E. pungent = pricking, being of hot taste.
|