பக்கம் எண் :

சுட்டு வேர்ச்சொற்கள்48

சுள்ளான் = சுள்ளெறும்பு = ஊசியாற் குத்துவதுபோற் கடிக்கும் எறும்பு. சுள்ளு(ப்பூச்சி) - தெள்ளு(ப்பூச்சி). சுள் - சுணை = சிறு முள், முட்குத்துவது போன்ற மானவுணர்ச்சி, கூர்மை, தினவு, அறிவு. சுணைத்தல் = தினவெடுத்தல்.

சுள் - சுள்ளை - சூளை. சுளுந்து = கொள்ளி. சுள்ளாப்பு = கடுவெயில், தீவிரம், உறைப்பு. சுள் = நெருப்பு, கதிரவன்.

L. sol, A.S. sunne, Ice.sunna, Goth. sunne, E. sun.

சுள் - சுர் - சுரம் - சுரன்- சூரன்- சூர்ய (வ.). சுரம் = நெருப்பு, காய்ச்சல், காயும் பாலைநிலம், நெருப்பால் அல்லது கடைகோலால் இடும் துளை, துளையிற் பிறக்கும் ஒலி. சுர்- சுரை = துளை, துளையுள்ள குழாய், சுரைக்குடுக்கை, சுரைக்காய், துளையுள்ள பால்மடி, மடியிற் சுருக்கும் பால். சுரை - சுர = துளைவழி பால் ஒழுகு. சுர - சுரபி = பசு. சுரன் = கதிரவன். தேவன், ஒ.நோ: தேய் - தே - தீ. தே - தேவு - தேவன். தேய் - தெய் - தெய்வு - தெய்வம். சூரன் = கதிரவன். "சூரன்மா மதலை" (பாரதம்). சுள் - சுண்டு. சுண்டுசொல் = சுடுசொல். சுண்டான் = கொள்ளி. சுள் - சுர் - சூர் = நெருப்பு, அச்சம்.

ஒ.நோ: உரு = நெருப்பு, அச்சம். சூர் - சூரன்.

சுள்ளக்காய் = மிளகாய். சுள்ளிடுவான் = மிளகு, மிளகாய்.

சுள்ளம் = கோபம். சுளங்கு - சுணங்கு = கோபி, ஊடு, வேலை

செய்யப் பின்வாங்கு. சுணங்கு - சுணக்கம்.

E. slack, A.S. sleak, Sw. slak, Ice. slakr.

சுளங்கு - சுளக்கம் - சுள்ளக்கம் = கோபம், வேர்க்குரு. சுணங்கு - உணங்கு = காய். சுணங்கு = கோபம், ஊடலால் வரும் தேமல்.

சுள்ளல் = மென்மை. சுள்ளலன் = மெலிந்தவன். சுள்ளி = காய்ந்த குச்சு. சுள்ளு = சிறுமை, கருவாடு. சுள்ளாணி = சிறிய ஆணி. சுளு - சுளுவு = சிறுமை, எளிமை. சுளு - சுலு - சுலவு - சுலவம் - சுலபம் - சுலப (வ.). சுணங்கு = மெலிவு. சுண்டு = காய்ந்து சுருங்கு. சுண்டு = சிறியது. சுண்டை = சிறிய காய். சுண்டிகை = சிறு நாக்கு, உண்ணாக்கு. சுண்டிகா (வ.).

சுள்ளற்கோல் = வளைதடி. சுளையம் = வளையம். சுளைய மாடு = வளையவளைய (திரும்பத்திரும்ப)ச் சொல். சுளகு = வளைந்தது. சுள் - சுண்டு = வளைத்திழு, வலி. சுளை = வளைந்து அல்லது சுற்றியிருக்கும் பழச்சதை.

நெருப்பும் உறைப்பும் மிகுந்த வேகமுள்ளவை யாதலால், இக் கருத்துச் சொற்கள் மதிநுட்பத்தையும் குறிக்கும். சுளுகு = நுட்பவறிவு, திறப்பேச்சு. ஒ.நோ: வேகு - வேகம் = விரைவு, மதிநுட்பம். காரசாரம் = மதிநுட்பம்.

சுள் - சும்பு = எரி, வாடிச் சுருங்கு. சும்பு - சோம்பு = வாடு, மந்தமாயிரு, தூங்கு. கபசிசோம்பு மைதுனங் காட்சிநீர் வேட்கை, தெசிகின்ற தீக்குணமோ ரைந்துக (சிலப். உரை, ப. 103).

சோம்பு - L. somnus, sleep. சோ (இ.) = தூங்கு.