கொள்- கோள் = சூரியனைச் சுற்றும்
கிரகம். கோள் - கோளம் - கோளா = உருண்டை. கோள்
- கோளி - கோலி. கொள் (கொண்பு) - கொம்பு - கம்பு =
வளைந்தது. கொள் - கொண்டி = வளைந்த கொக்கி.
கொள் - வலிந்து வாங்கு. கொள் -
கொள்ளை. கொள் - கொண்டி = கொள்ளை.
கொள் - கொல். கொள் - கோள் =
பிடித்தல், பிடித்துக்கொல்லுதல். பேய்
கோட்பட்டான், புலிகோட்பட்டான் என்னும்
வழக்குகளை நோக்குக.
கொல் - E.
kill, quell, A.S. cwellan, to kill.
கொல் - கொல்லன் . ’மரங்கொல்
தச்சன்’ என்னும் வழக்கை நோக்குக.
கொள் - கொடு = காய்ந்த மரமும்
விளைந்த பயிரும்போல வளைந்து கொடு. கொடுமை =
நெறியினின்று வளைதல், தீமை.
கொடுங்கோல், கொடுக்காய்புளி
என்பவை வளைதல் குறித்தல் காண்க. கொடு - கொடி =
வளைந்தது ஒ. நோ : வள் (வளை) - வள்ளி - வல்லி =
கொடி. கொடு - கொடுக்கு - கொடுக்கி - கொக்கி.
கொடுக்கு - E.crook,
a bend, W. crwg, a hook, Ice. krokr, Dut. croke, a fold or
wrinkle.
கொக்கி - E.hook,
A.S. hoc, Dut. haak, Ger. haken.
கொடு - கொடிறு - குறடு. கொடு -
கொட்டம். கொட்டம் + ஆரம் - கொட்டாரம். கொடு
+ இல் - கொட்டில் (வளைந்த இடம்).
E. cote, an inclosure for sheep.
கொள் - கோள் - கோண்- கோடு. கோண்
- கோணம்.
Gk. gonia, angle, E.gon (sfx).
கோடு - கோடி = கடைசி. கதிரவனும்
மக்களும் பயிரும் வளைந்து முடிவடைதல் காண்க. கோடு -
கோட்டை. கோட்டம் = வளைவு, வளைந்த மதில், மதில்
சூழ்ந்த அரண்மனை அல்லது கோயில்.
Cf. E. court, O.Fr. cort, Low., L. cortis,
a court yard, Gk. chortos, an inclosed place.
கொள் - கொள்ளி = நெருப்பைக்
கொண்டது. கொள் - கொளு - கொளுவு.
கொளு - Cf.
E. clue.
கொள் - கொளை = நரம்பைப் பண்
கொள்ளச் செய்தல். கொளு - கொளுத்து = நெருப்பை
அல்லது அறிவைக் கொள்ளச்செய். கொள் (கோள்) +
தி - கோட்டி = அறிவுகொளுத்தல், சொற்பொழிவு,
சொற்பொழியும் பைத்தியம்.
|