"கோட்டிகொளல்" (குறள். 401). கொள்க(கொணம்)
- குணம் = கொண்ட தன்மை. கொள்- கொள்நன் -
கொள்ளுநன் - கொழுநன் - கொழுந்தன்.
ஒ.நோ : கொள்கொம்பு - கொழுகொம்பு.
குள் = வளை, பொருந்து, கல , திரள். குள் -
குள - குளகு - குளகம். குள் - குளு - குழு - குழுவு - குழுமு. குள் -
குல் - குல - கல. குல் - கோல் = திரட்சி, திரண்ட
கம்பு. குழு - குழல் = திரட்சி. குழு - குழவி = திரண்ட
அரைகல். குள் - குண்டு - குண்டை. குண்டு - குண்டன்.
குல் - குலை - திரட்சி, கொத்து. குல் -
குர் - குரல் = கூலக்குலை.
E. crop, the produce of a field, A.S. crop,the
top shoot of a plant.
குள் - குழி = வளைந்த துளை அல்லது
பள்ளம்.
Cf. E. hole, A.S. hol, Dut. hol, Dan. hul,
Ger. hohl, Gk. koilos, E. hollow, A.S. holh.
குள் - குழல் - குடல் = துளையுள்ளது, குள் -
குழை - குழாய் = துளையுள்ளது. குள் - குளம் = பள்ளம்,
நீர்நிலை.
ஒ.நோ: கயம் = பள்ளம், நீர்நிலை. குள்
- குண்டு = பள்ளம், நீர்நிலை.
’குண்டு குழியும்’ என்னும் வழக்கை
நோக்குக. குள் - குட்டை - குட்டம் = குளம், சிறுகுளம்.
’குளங்குட்டை’ எ.வ. நோ. குல் - குர் - குரல் = துளை,
தொண்டைக்குழி, தொண்டை, தொண்டையிற்
பிறக்கும் ஓசை.
E. craw, the throat of fowls, Dan. kroe, Ger. hragen,
Scot. craig, Skt. kreeva, the neck, E. crop, A.S. crop,
Dut. crop. the craw of a bird.
குள் = பொருந்து, கூடு. குள் - குள - கள -
களம் = கூட்டம், அவை, கூடுமிடம், வயல். களம் - கணம்
(வ.). களம் - களமன் = உழவன். களம் - களரி. களம் -
களகம் - கழகம். களத்தல் = கூடுதல், மணத்தல். களம் -
களவன் - கணவன் - கடுவன். களவன் - கள்வன் =
ஆண்நண்டு. இனி, கள்வன் = கள்ளன்போல் இரவில்
வெளியேறும் நண்டு எனினுமாம். குள - குழ - குழம்பு -
உழம்பு - உழப்பு - உழக்கு.
சுள் - சுளி - சுழி = வளை, உருள்,
முகந்திருகு. சுழி - சுழல் - சுழங்கு = சுற்று, வருந்து.
சுழல் - உழல். சுழல் - சுழலை = சுற்று, திருக்கு,
வஞ்சகம். சுழல் - சுழலம் = சுற்று, திருக்கு, வஞ்சகம்.
சுழல் - சுழற்று - சுழட்டு. சுள் - சுளு - சுளுக்கு = நரம்பு
வளைவு. சுள் - சுல் - சுன் - சுன்னம் = சுழி, வட்டம். சுன்
- சுனை = வளைந்த நீர்க்குழி, மடு.
குள் - கள் - கல் - கர் - கரு. கள் - காள் -
காழ் - காள் - காளம். கள் - கண் - காண் - காணி. கல்
- கால் - காலம். கரு - கார் - கால்.
சுள் - சுரி = வளை, சுருள், திருகு, முறுக்கு,
துளையிடு. சுரி - சுருள்.
|