சோக்கப்பட்டது. யார்
அது? சொன்னது யார்? என்பன போன்ற வழக்குகளில் அது
என்னும் அஃறிணைச் சொல் உயர்திணைப்பாற்
பொதுவாய் வழங்குவதையும், சாத்தன் சாத்தி முதலிய
உயர்திணைப் பெயர்கள் பண்டைக்காலத்தில்
எருதிற்கும் ஆவிற்கும் இடப்பட்டமைமையயும், தாய்
பிள்ளை முதலியவை விரவுப்பெயர்களாய் இன்றும்
வழங்குவதையும் நோக்குக.
மூவகைப் படர்க்கை விகுதிகளுள்,
இடைமைச் சுட்டு விகுதிகள் வழக்கற்றுப் போயின.
ஏனை யிருவகையுள் சேய்மைச் சுட்டு விகுதிகளே
பெருவழக்காய் வழங்கி வருகின்றன.
பெரும்பான்மைபற்றி அன் ஆன் அள் ஆள்
அர் ஆர் என்று வினையியலிற் கூறினாரேனும், பால்
விகுதிகள் மூவகைச் சுட்டுக்கும் பொதுவாயிருத்தல்
பற்றியே, ’னஃகான் ஒற்று’, ’ரஃகான் ஒற்று’ எனக்
கிளவியாக்கத்திற் பொதுப்படக் கூறினார்
தொல்காப்பியர்.
இனி, தன்மை முன்னிலை விகுதிகளாவன:
தன்மை
ஏன் - என் - எல்
(நான்) - (ஆன்) - அன் - அல் |
}. |
ஒருமை
|
ஏம் - எம்
(நாம்) - ஆம் -அம்
(உம்) - ஒம் - ஓம் |
} |
பன்மை |
செய்கு கண்டு செய்து சேறு என்னும்
வாய்பாட்டுப் பண்டை உகரவீற்று வினையெச்ச
முற்றுகளுடன் பன்மைக்கு மகரமெய்யை (அல்லது
உம்மீற்றை)ச் சேர்த்ததினால், ’உம்’
ஈறுண்டாயிற்று. இது பின்னர் ஒம் - ஓம் எனத்
திரிந்தது. ன் -ல் போலி.
ஒ.நோ: திறம் - திறன் - திறல். மறம் -
மறன் - மறல் - மறலி.
முன்னிலை
நீ - தீ - தே - தை
நீ - தீ - தி
நீ - ஈ - இ
நீ - ஈ - ஏ - ஐ - ஆய் |
}. |
ஒருமை
|
நீம் - ஈம் - இம்
நீர் - தீர்
நீர் - ஈர் - இர்
நூம் - ஊம் - உம்
|
} |
பன்மை |
த - ந (ன) போலி, எ-டு: நுனி - நுதி. தீ - தி
குறுக்கம்.
|