பக்கம் எண் :

சுட்டு வேர்ச்சொற்கள்68

எ-டு : ஆப்பீ - ஆப்பி.

பிற பன்மையீறுகள்

மகர் < மார். மகர் = மக்கள்.

செய்வார் - செய்ம்மார் (வினைமுற்றும் வினையெச்சமும்).

வ - ம போலி, செய்யும் அவர் - செய்யுமவர் - செய்யுமோர் (வினையாலணையும் பெயர்). ’கள்’ ஈறு கல என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாகத் தெரிகின்றது. கல - கள - களம் = கூட்டம், கூடுமிடம். ஏர்க்களம், போர்க்களம். களமகர் - களமர். களம் - களரி. களம் < (களகம்) - கழகம். களம் < கணம் (வ.).