V. வினாப்பெயர்
(1) ஏ, ஏன் (ஒருமை). ஏம் (பன்மை).
ஏன் - ஏவன். ஏம் - எவம்.
ஏன் - என்.
ஏன் - என். என் + அது -
என்னது. என் + து - எற்று.
என் + அ = என்ன. ஏன் என்னும்
வினாப்பெயர் இன்று காரணம் வினவும் குறிப்பு
வினையெச்சமாகவும் வினைமுற்றாகவும்
வழங்குகின்றது.
(2) ஏவன் ஏவள் ஏவர் ஏது ஏவை.
இவ் வடிவங்களால், ஆவன் ஈவன் ஊவன்
முதலிய நெடில்முதற் சுட்டுப் பெயர்களும் ஒரு
காலத்தில் வழங்கினவோ என ஐயுறக் கிடக்கின்றது.
ஏது என்னும் பெயர், ஒரு பொருள் வந்த வழியை வினவும்
குறிப்பு வினைமுற்றாகவும் இன்று வழங்கின்றது.
(3) யாவன் யாவள் யாவர்
யாவது யாவை.
ஏ - யா. யா = யாவை. யாவது -
யாது.
(4) எவன் எவள் எவர் எது
எவை.
ஏ - எ. எ + அது - எவ்வது =
எப்படி.
வினாப் பெயர்கள் இன்று ’ஏ’, ’எவ்’, ’யா’
என மூவகையடிகளைக் கொண்டுள்ளன. இவற்றுள், ’ஏ’, ’எவ்’
அடிகள் தெலுங்கில் வேற்றுமைத் திரிபில், ’வே’ என
இலக்கணப்போலி (metathesis)
யாகி, பின்பு ஆரியமொழிகளில் ஒளகெக எனப்
போலித் திரிபு கொள்ளும்.
வ -க போலி, எ-டு : சிவப்பு - சிகப்பு,
ஆவா (ஆ +ஆ ) ஆகா.
’யா’ அடி ஆரியமொழிகளில் ’ஜா’ எனத்
திரிந்தும் திரியாதும் தொடர்புகொள் (relative)
வினாச்சொற்களைப் பிறப்பிக்கும்.
வினாச்சொல்
எ-டு: தெ.
- ஏவி = எவை. வேட்டி = எவற்றின்.
இ. - கோன் = யார், கியா =
என்ன, கிதர் = எங்கே, கித்னே = எத்தனை.
வ. - கிம் = யார், குத்ர =
எங்கு, கதா = என்று, கதம் = எப்படி.
L. quis = யார்,
quid = என்ன,
quaru = எப்படி, vqualis
= எத்தகைய.
தொடர்புகொள் வினாச்சொல்
வ.-யத் = யார், எது. யத்ர = எங்கு, யத: =
எங்கிருந்து, யதா = எப்படி.
இ.- ஜோ = யார், ஜகான் = எங்கு, ஜப் =
என்று, ஜித்னா = எவ்வளவு.
செருமனியத்தில் வெகரமே வினாவடியாக
வுளது.
எ-டு: wer
= யார், was
= என்ன, welch
= எது, wenn -
என்று.
|