பக்கம் எண் :

சுட்டு வேர்ச்சொற்கள்73

குவை - L. cavus, E. cave, cage.

குவி - குவல் - குவளை = உட்குவிவு, கண்குழி, மணி பதிக்குங் குழி, ஒரு கலம்.

குவி - கவி - கவிகை. கவிதல் = ஒருகலம், குப்புறுதல், வளைதல், மூடுதல். கவித்தல் = முடியைக் கவித்துச் சூட்டுதல். கவி - கவிழ்.

குமி - குமிழ் - குமிழி. கும் - கும்பு = குவி, கூடு. ஒளகும்பக் குழியக என்னும் வழக்கை நோக்குக. கும்பு + அனை - (கும்பனை).

Fr. compagnie, E. company.

கும்பு + அல் - கும்பல். கும்பு + அம் - கும்பம் = குவியல், குவிந்த குடம் (Skt. kumbha), குடம் போன்ற ஓரை. (இராசி) கும்பச் சுரை, கும்பப் பிளவை என்னும் பெயர்களை நோக்குக. கும்பற்காடு = திரண்ட காடு. கும்பு - கும்பா = குவிந்த கலம். கும்பளம் = குவிந்த கலியாணப் பூசணி. கும்பு - கும்பி = குவியல். கும்பு + இடு - கும்பிடு = கைகுவி. கும்பை = சேரி, கும்பகோணம்.

ஒ.நோ: சேர் - சேரி. கும்பி = மூச்சைக் குவி அல்லது அடக்கு.

கும்பு - குப்பு. குப்புறு = குவி, கீழ்நோக்கிப் படு. குப்புறு x மல்லா ; மலர். குப்பு - குப்பி = குவிந்த கலம். குப்பு - குப்பை = குவியல்.

L cuppa, It. cappa, Fr.coupe, A.S. heap, E. heap, Ger. haufe.

குப்பம் - குப்பன் - குப்பான் = பட்டிக்காட்டான், மூடன். இனி, குப்பன் = மனங்குவிந்த மூடன் என்றுமாம். குப்பு = குப்பன் = குப்பையிற் புரட்டப்பட்டவன்.

கும் - குந்து = குவி, குவிந்து உட்கார், பதி. குந்து - குந்தளம் = குவிந்த கொண்டை. குந்து - கூந்து - கூந்தல் = கொண்டை, பெண்முடி, கூந்தல் போன்ற பனையுறுப்பு. குந்து - குந்தலம் - கூந்தாலம் - கூந்தாலி = குவிந்த கணிச்சி. குந்து - குந்தனம் = குவிந்த அல்லது மணி குந்தும் தகடு. குந்து - குந்தி - குதி = குவிந்த காலடி. குந்து - குது - குதை = குதிபோன்ற வில்லடி.

கும்பு - கூம்பு - கூப்பு = கைகுவி. கும் - கொம் - கொம்மை = உமி, கைகுவிப்பு, திரட்சி. குப்பு - குப்புளி - கொப்புளி - கொப்புளம் - பொக்குளம் (இ.போ.). கொப்புளித்தல் = வாய் குவித்து நீரை உமிழ்தல், வாய்குவித்தாற் போன்ற புறப்பாடு தோன்றுதல்.

பொக்குளம் - E. pock, a small elevation of the skin containing matter, as in smallpox, A.S. poc, Ger. pocke, Dut. pok. E. pocks (pl.) - pox.

கூம்பு - சூம்பு. சூம்பல் = கை பழம் முதலியவை குவிதல் அல்லது சிறுத்தல். குமட்டுதல் = வாய் குவிந்து வாந்தியெடுக்க வருதல். குமட்டு - உமட்டு - உவட்டு. குமட்டி - கும்மட்டி - கொம்மட்டி = குமட்டும் கசப்புக்காய்.

கும் - குஞ்சு - குஞ்சம் = குவிந்த தொங்கல். குஞ்சு - கொஞ்சு = வாய்குவிந்து முத்தமிடு, வாய்குவிந்து மழலையாடு.

சூம் - சூம்பு - சூப்பு - சுப்பு - சப்பு. சூம்பல் = வாய்குவித்து உறிஞ்சல். சூப்பு - Ger. suppe, Fr. soupe, E. sup.