| 1. |
குட்டமலை
குமரிமலை எங்கள்மலை நாடு |
| |
கொடியபெருந் தென்கடலே கொண்டதெங்கள் நாடு |
| |
பொற்றைமலை
பொதியமலை எங்கள்மலை நாடு |
| |
புகலரிய
பழைமையுள்ள தெங்கள்மலை நாடு. |
| |
|
| 2. |
தென்கடலில்
எழுநூற்றுக் காதமெங்கள் நாடு |
| |
தேய்பிறைபோல்
பலமுறையாய்த் திரைபுகுந்த நாடு |
| |
இன்குமரி
பஃறுளிக்கே இடையிலுள்ள நாடு |
| |
இலமூரியா
என்றுபெய ரிட்டதெங்கள் நாடு. |
| |
|
|
3. |
ஆளியன்னம் நீர்நாயென்
றரியவுயிர் நாடு |
| |
ஐந்திணையாய் எமதுமுன்னோர்
அமர்ந்திருந்த நாடு |
| |
வீளியர்போல் குலங்களெல்லாம்
வீரங்கொண்ட நாடு |
| |
வேற்றரசர் வரவிடாமல்
வெற்றிபெற்ற நாடு. |
| |
|
|
4. |
வடமொழியே கலவாமல்
வளர்ந்ததமிழ் நாடு |
| |
வளமாகத் திராவிடரே
வாழ்ந்துவந்த நாடு |
| |
திடமுடன் ஒற்றுமையாய்த்
திகழ்ந்ததெங்கள் நாடு |
| |
தேவரையும் வசிகரித்த
திருமிகுந்த நாடு. |
| |
|
|
5. |
முத்தமிழும் பயின்றிருந்த
மூதறிஞர் நாடு |
| |
மூடருடன் பேதைமதி
கேடரில்லா நாடு |
| |
வித்தைகலை கைத்தொழில்கள்
விஞ்சியுள்ள நாடு |
| |
வேறுபடா தூண்மணத்தில்
விரவிவாழ்ந்த நாடு. |
| |
|
|
6. |
நீர்நிலத்து வாணிகம்
நிகழ்ந்ததெங்கள் நாடு |
| |
நெடுந்தூரத்
தரசருடன் நேயமுற்ற நாடு |
| |
பார்நிலத்து நாகரிகப்
பைந்தமிழ் நாடு |
| |
பலமான சேரசோழ
பாண்டியநன் னாடு. |