New Page 1
"நடந்தானை ஏத்தாத
நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே!"
என்று ‘கோத்த குரவையுள்’
தெய்வத்தை ஏத்துகின்றார்கள். இந்தப் பாட்டிலுள்ள தமிழிசையின்பம் பாவாணரவர்களை ஈர்த்திருக்கிறது.
எனவே இந்த இனிய செந்தமிழ்த் தொடையைத் தம்மை உய்யக் கொள்ள வந்த இயேசு பெருமானுக்கு உரிமையாக்கிப்
பாடுகிறார்கள். இந்த நூலில் "குமரற் பராமவல்" என்ற தலைப்பின்கீழ் இப் பாடல்கள் வருகின்றன.
ஒருசில வரிகள்:
"ஓவறஊ ழியஞ்செய்த உன்னதனாம்
ஏசு
தேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திறமிருந்துங் கேளாதார் செவியென்ன செவியே!"
"பரந்தேதன் பகைவர்வரப் பருவம்வரு முன்னே
கரந்தானைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்விழித்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே"
"கடந்தானைப் பன்னிருவர் கண்டஞ்ச நீர்மேல்
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே!"
இவ்வாறு பாடுகிற சிறப்பில்
இளங்கோவடிகளார் செவியையும் கண்ணையும் நாவையுமே பாடப் பாவாணரவர்கள் கையையும் நெஞ்சையும் சேர்த்துப்
பாடுகிறார்.
"தண்ணளியுந் தானாகித்
தனிநின்ற நிலையைக்
கண்ணியதுங் குவியாத கையென்ன கையே
கைவீசிச் செல்வார்தங் கையென்ன கையே!"
"நண்ணியெனை மீட்டருளும் நாதனைநள் ளிரவும்
எண்ணியெண்ணி யுருகாத நெஞ்சென்ன நெஞ்சே
இடம்பரந்து வல்லென்ற நெஞ்சென்ன நெஞ்சே"
உண்மையிலேயே
பாவாணருடைய பாடல்களும் சிலம்பினைப் போலவே நம்முடைய நெஞ்சை யள்ளிக்கொள்கின்றன.
இதனைத்தான் நாம் தன்னாக்கம்
செய்தல்
(Indigenization)
என்கிறோம். கிறித்தவத் தொழுகையில் வாழைப்பழத்தில் ஊதுவத்திகளைக் குத்தி வைத்துக்
கொள்வதையோ, திருநீற்று வேடம் புனைந்து கொள்வதையோ நாம் தன்னாக்கம் என்று கூறுவதில்லை.
இத்தனை ஆண்டுக் காலமாக
இத்தனை அரிய இன்றமிழ்ப் பாடல்கள். இயேசுவைப் பாடிய இனிய பாடல்கள் எங்கோ ஒளிந்து
|
|
|