New Page 1
பெரிதும் மகிழ்ந்து பாடப்பட்டுவந்த
‘மேரே மவுலடில்லா’ முதலிய ஒருசில உருது பாட்டுகளில் அமைந்த பாட்டுகளும் இந்த நூலில் காணப்படுகின்றன.
இவற்றைக் கருதிடும்போடு, பாவாணர் அவர்களிடமிருந்த இசையார்வம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
அடங்கிக் கிடவாமல், எல்லைகள் பலவற்றையும் கடந்து சுதந்திரமாக யாண்டும் சிறகடித்துப் பரந்துகொண்டிருந்தது
என்பது நன்கு தெரியும்.
இயேசு பெருமானின் பிறப்பு முதல், அவருடைய ஊழியமும் பாடுகளும் உயிர்பெற்றெழலும் இடையாக,
அவர் திரும்பவருதல் ஈறாகச் செந்தமிழ்ச் சுவை சொட்டச் சொட்ட, பத்திச்சுவை பெருகப்
பெருகப் பாடப்பட்டுள்ள பாட்டுகள் இந்த நூலில் உள்ளன. பாவாணர் இந்த நூலின்கண் இடையே கிறித்துவின்
பாடுகளின் பெருமையை எடுத்துரைக்கும் முறையில், தம்முடைய கிறித்தவ மன உறுதிப்பாட்டின் அருமையை
இனிய எளிய உரைநடையில் எடுத்துரைக்கிறார். எனவே, இந்த நூலினை ‘உரையிடையிட்ட பாட்டு’
எனவும் ஓதி மகிழலாம்.
‘பாவினை இன்றியும் பண்டிதர் உளரால்’, என்று காப்புச் செய்யுளில் பாடியிருக்கிறார் பாவலர்,
பாட்டில்லாமல் ஒருவனைக் கற்றவன் என்றே சொல்ல முடியாது என்பது அவருடைய கருத்தாகும். பாட்டைப்
படைக்க முடியவில்லையாயினும் அதனைத் துய்த்திடும் ஆற்றலையேனும் கற்றவன் பெற்றிருப்பான் என்பது
அவருடைய எண்ணம் எனத் துணியலாம். இவ்வாறு பாடுகின்ற இடத்திலேயே "தேவனைப் பாடவும் திருவருள்
வேண்டுமே" என்று பாடி, பாடுவதற்கு இறையருள் இன்றியமையாதது என்ற உண்மையினை அவர் வலியுறுத்துகிறார்.
தேவநேயரவர்கள் இளமைக் காலத்தில்
செய்யப்பட்ட பாட்டுகள் இவை. அக்காலத்திலேயே அவருக்குப் பழைய தமிழ்நூல்களில் இருந்த ஈடுபாடு
இந்த நூலின் வாயிலாகப் புலனாகிறது. சான்றாக ஒன்று.
சிலப்பதிகாரத்தில், ஆய்ச்சியர் குரவையில், இடைக்குலப் பெண்கள் திருமாலைப் பாடிப்
பரவுகிறார்கள்.
"சேவகன்சீர்
கேளாத செலியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!"
"கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே"
|