|
கலிவிருத்தம் |
| |
| பூவினிற்
போகமே புந்தி பொருந்திடும் |
| ஆவன
மாந்தருக் கன்று வரைந்தன |
|
பாவினை யின்றியும் பண்டித ருள்ளரால் |
| தேவனைப்
பாடவுந் திருவருள் வேண்டுமே. |
| |
|
கடவுட்பரவல் |
| |
|
பிதா |
| |
|
அறுசீர்க்
கழிநெடிலடி யாசிரிய விருத்தம் |
| |
| மன்னுயி1
ரென்றுங் கெட்டு மாண்டுபோ காம லென்றும் |
| மன்னுயி2
ரடைய வேக மகனைமுன் னளித்துப் பாரில் |
| இன்னதா
யன்பு கூர்ந்தா ரெனிற்றிருப் பரம தந்தை |
| என்னதென்
றுரைப்பேன் ஈசன் எனக்கருள் செய்த வாறே. |
| |
|
1. மனிதாத்துமா,
2. நித்தியசீவன். |
| |
|
குமாரன் |
| |
|
பாவியை மீட்க வின்பப் பரத்தைவிட் டிறங்கிப் பாவம் |
| பூவிலோ
ரேழை யாகிப் பொறையொடு திரிந்து சுற்றி |
| நாவினா
லுரைக்க வொண்ணா நடுக்குறும் பாடு பட்டே |
| ஆவியு
மளித்த ஏசு வடியினை முடிமேற் கொள்வாம். |
| |
|
பரிசுத்தாவி |
| |
| எண்ணரு
மாதி நீர்மே லியங்கியே ஏசு தேவ |
| புண்ணியன்
தலைமே லன்று புறவ1மா யிறங்கிச் சீடர் |
| கண்ணிய
பெந்தேக் கோத்திற் கனற்பெருங் காற்று வீசி |
| மண்ணியல்
மொழிகள் பேச மருவுதூ யாவி போற்றி. |
| |
|
1. புறா. |