முத்தேவர் |
|
நித்திய
சீவ னைமுன் நிமலனாந் தந்தை தந்தார் |
குற்றவூண்
மாந்தி மாந்தன் குற்றுயி ரானான் ஏசு |
நற்றவன்
தசையி ரத்தம் நன்மருந் துணவாய் நல்கச் |
சுத்தமா
வாவி யாரும் சுகம்பெற வீசி னாரே. |
|
திரியேக
தேவன் |
|
எங்கணும்
நிறைந்த செல்வத் திறைவனி லொருகூ றன்றோ |
கொங்கலர் நறுந்தண் டாராய் குமரனென் றுரைக்குந் தெய்வம் |
அங்கவ
ரிருவர் கொண்ட ஆவியே பரிசுத் தாவி |
தங்குமோ
ஆவி யின்றித் தம்பிரான் வினையு முண்டோ? |
|
அவையடக்கம் |
|
பாட்டுடைத்
தலைவ னந்தப் பரமனே யவனோர் காலும் |
கேட்டினை
யடையா னாகக் கிளப்பதென் பொருத்த மின்மை |
நாட்டியல்
வழுக்க ளைந்தும் நம்பனோர் பொருளாக் (கொள்ளான் |
காட்டுறப்
பிழைக டோன்றாக் கல்விநூ லுலகத் துண்டோ? |