பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 111

திக்கற்ற பாவிக்குத் தெரிவிப்பது

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 
   பாங்கரும் பொருளும் மற்றும் படிவமு மில்லை யென்றே
   ஏங்கியிங் கிருக்கும் பாவி யெழுமனக் கிளர்ச்சி யோடே
   நீங்குமோர் பாவி மீளின் நின்மலன் தூத ரெல்லாம்
   தாங்கரும் பேரா னந்தத் தாண்டவ மாடி நின்றார்.
 

புறமதத்தார்க்குப் புகல்வது

 
   வானத்தின் கீழே யெங்கும் வணங்குதற் குரிய தெய்வத்
   தானத்தில் ஏசு வல்லால் தழுவுறப் பிறிதொன் றுண்டோ?
   மேனித்த வீடு சேர மிகுபல நெறிக ளில்லை
   நானத்த முயிர்மெய்1 யென்றார் நம்பனா ருலகத் தீரே.
 

1. வழி, சீவன், சத்தியம்.

குமரற் பரவல்

 

கொச்சக ஒருபோகு

   
   1. பாவிகளை மீட்டருளப் பாரேழை யாகிச்
  சேவடியுஞ் சிவந்துளையச் சேணடந்து நாளும்
  ஓவறஊ ழியஞ்செய்த உன்னதனாம் ஏசு
  தேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
  திறமிருந்துங் கேளாதார் செவியென்ன செவியே.
   
   2. சிரந்தானுஞ் சாய்க்கவிடஞ் சிறிதுமின்றி யெங்குங்
  கரந்தாள்மெய் கண்ணுயிர்வாய் கருதியவர்க்கீந்து
  பரந்தேதன் பகைவர்வரப் பருவம்வரு முன்னே
  கரந்தானைக் காணாத கண்ணென்ன கண்ணே
  கண்விழித்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே.
   
   3. மடந்தீரப் பலவுரைத்து மாநிலத்திற் சுற்றிப்
  படர்ந்தாடும் படவரவு பாதாளஞ் சாவு
  கடந்தானைப் பன்னிருவர் கண்டஞ்ச நீர்மேல்
  நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
  நசரேய நமவென்னா நாவென்ன நாவே.