பக்கம் எண் :

112செந்தமிழ்க் காஞ்சி

4
   4. விண்ணொளியும் விரிநீரும் விரைந்தபெருங் காற்றும்
  மண்ணுயிரு மிருடீர மலருமிரு சுடரும்
  தண்ணளியுந் தானாகித் தனிநின்ற நிலையைக்
  கண்ணியதுங் குவியாத கையென்ன கையே
  கைவீசிச் செல்வார்தங் கையென்ன கையே.
   
   5. பண்ணியமைந் தால்வனத்திற் பகருமையா யிரவர்
  உண்ணியநல் விருந்தளித்த உம்பர்பெருங் கோனை
  நண்ணியெனை மீட்டருளும் நாதனைநள் ளிரவும்
  எண்ணியெண்ணி யுருகாத நெஞ்சென்ன நெஞ்சே
  இடம்பரந்து வல்லென்ற நெஞ்சென்ன நெஞ்சே.

அன்புறு பதிகம்

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

பண் - திருநேரிசை

1. கொரி. 13

 
   வெண்கலத் தாளம் போல விண்ணில மொழிகள் பேசி
   முன்புகல் தரிசி யாகி முழுமறை யறிவுற் றாலும்
   மன்பெரு மலையைப் பேர்க்கும் மால்விசு வாசி யேனும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
 
   நன்பொருள் யாவு மீந்து நல்கினு முடம்பு தீக்குத்
   தன்புகழ் கூறா தென்றும் தயவொடு சாந்த மேவி
   புன்செருக் கழுக்காக றின்றிப் புரிவினைத் தூய்மை கொள்ளும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
 
   தன்பதம் சினமே தீங்கு தழுவிடா தநியா யத்தில்
   இன்புற வின்றி மெய்யில் எழிலுற மகிழ்ந்தி யாவும்
   நம்பியே பொறுக்கும் தாங்கும் நலமுடன் விசுவா சிக்கும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
 
   மன்பல பாடை தீர்க்க தரிசன மறிவு மாயும்
   புன்றலைக் குழவிக் கேற்ற புருடனா யொழித்து விட்டேன்
   நம்புதல் விசுவா சத்தில் நனிபெரி தாக மன்னும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.