பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 113

யாக். 2

   அன்பறு விசுவா சம்மே யமையுமென் றிருத்தல் வேண்டா
   பண்பறு பேயும் நன்றே பரமனை விசுவா சிக்கும்
   பின்புநல் வினையில் லாமற் பிழைக்குமோ விசுவா சந்தான்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
 
குறள்

   நண்பெனுஞ் சிறப்புக் கொண்ட நவையறு மார்வ மாந்தர்
   புன்கணீர் பூசல் செய்யப் புதவுடை வெள்ள மாகி
   என்புயிர் பொருள்க ளெல்லாம் ஏனையோர்க் குரிமை செய்யும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
 
பொது

   பண்பெறு மழலை மக்கள் பயிலரு மசுத்த ரேனும்
   அன்புடை யிருபெற் றோரும் அருகணைத் துவகை பூப்பர்
   மன்பெருங் குறைக ளெல்லாம் மறைத்துறு பாவம் போக்கும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
 
   நண்பறத் தூய ரேனும் நளிகடற் காதற் றேவன்
   எண்பதத் தேழை யாகி இழிகுலத் தவரோ டுண்டு
   புண்படப் பாடு பட்டுப் பொன்றினர் துளிய தேனும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
 
   துன்புறு தவத்தின் யோகத் துறவறந் துவரப் பூண்டு
   வன்புறு யாக்கை பெற்று வாசியில் வாழ்ந்து நீடி
   எண்பெருஞ் சித்தி பெற்றே எழிலுறு நிலைநின் றாலும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
 
   பண்புற மறைப யின்று பலபெரும் பட்டம் பெற்றும்
   இன்புறப் பிரசங் கித்தும் இலகுரை விளக்கங் கூறி
   நம்புறப் புதுமை செய்து நரருறும் போய்வி டுத்தும்
   அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.