(இம் மெட்டொன்றும்
என் உடனாசிரியர் ஏ.வி. சீநிவாசையர்
அவர்கள் தெரிவித்தது)
தேவகுமார! உன்
திருவடி சரணம் |
தீனதயாளம் உன்
திவ்வியா பரணம் |
தீரென தாவரணம்1. |
|
பூமனு வாகிய
புண்ணிய! சரணம் |
பூரண நீதியிற்
பொலிந்தனை கிரணம் |
போற்றினேன் உன் சரணம்2. |
|
தேச மெங்கும்
நலம் செய்தவா! சரணம் |
தீயரை மீட்கவே
தெரிந்தனை மரணம் |
தேகமுற்றாய் விரணம்3. |
|
பாவியை மீட்டருள்
பரமனே! சரணம் |
பக்தருக் குன்பதம் பயமறும்
அரணம்4 |
பதிந்தருள் என் கரணம்5. |
|
வானவர்
போற்றிடும் வலவனே! சரணம் |
வருந்தியெற்
காகவே பரிந்தனை சரணம் |
வந்தருளாய்
தருணம். |