பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 115

2

2
‘நாத விந்து கலாதீ‘ என்ற மெட்டு

   ஆர ணம்புகழ் ஆதீ நமோ நம  
   ஆத மின்புறு நீதீ நமோ நம  
   ஞான சுந்தர சோதி நமோ நம

(நரனாகி)

   
   நார ணம்புரி தூயாவி மீதுற  
   நான கன்1 கர ஞானாபி டேகமு  
   னாளு கந்துபி தாவோடு மேவிய

(நசரேயா)

   
   வார ணங்கலி லேயாவு மாருத  
   வேக முந்தணி வீறான வாசக  
   மாவ குந்துமெ யாவீ நிவாரண

(மறியாகி)

   
   மார ணம்படு பாதாள மாசுணம்  
   மாய வென்றெழு மாராய! பேய்முதல்  
   மாள என்றனை ஆளாய் மனோகர

(மணவாளா)

   
             1. நானகன் - யோவான் திருமுழுக்குநர்.  

3
கிறித்துவின் பிறப்பு

தீர்க்கதரிசனம் : மீகா. 5 : 2; ஏசாயா. 7 : 14

 

     'ஜோர் ஜோர் ஜோர்' என்ற மெட்டு

   
   1. யூதேயா தேச முற்ற யோக முள்ள பெத்தலேம்
  யூதாவின் மாகுலத்தில் ஏது நின்போல் இத்தலம்
   
   2. இசுரவேலை யாளும் பிரபும் எழுந்தருளும் உன்மிகை
  இதோஒரு மகவுயிர்க்கு மென்னும் எளிய கோலக் கன்னிகை.
   
   3. இம்மானு வேல னென்றே இவருக் கிடுவர் இயற்பெயர்
  நம்மோடு தேவ னென்னும் நலமிகும் பொருள் அதற்குயிர்.